பீகாரில் கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவருடன் பெண் ஒருவர் உடன்கட்டை ஏறியுள்ளார். பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள பர்மினியா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் சரித் மண்டல் (70).
புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர் ஞாயிற்றுக் கிழமை உயிர் இழந்தார். அவரது இழப்பை தாங்க முடியாமல் அவரது மனைவி தஹ்வா தேவி (65) வீட்டின் ஓரத்தில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.
உறவினர்கள் மண்டலின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று எரித்து விட்டு வீடு திரும்பினர். அப்போது வீட்டில் தேவியை காணவில்லை.
இதை யடுத்து அவரது மகன் ரமேஷ் மண்டல் அவரை பல இடங்களில் தேடினார். அப்போது சிலர் தேவி சுடுகாட்டை நோக்கி ஓடியதாக தெரி வித்தனர்.
உடனே ரமேஷ் மற்றும் உறவி னர்கள் சுடு காட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு பார்த்தால் ராம் சரித் மண்டலின் உடல் எரிந்து கொண்டிருந்த தீயில் குதித்து தேவியும் தனது உயிரை மாய்த்துக் கொண்டது தெரிய வந்தது.
இதை யடுத்து அதே இடத் தில் தேவிக்கும் இறுதிச் சடங்கு நடத்தப் பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பர்மினியா கிராமத் திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கிராமத் தாரிடம் வாக்கு மூலம் வாங்கி யதை போலீசார் வீடியோ எடுத்தனர். தேவி தற்கொலை செய்து கொண்ட தாக கருத்தப் பட்டுள்ள தால் போலீசார் வழக்குப் பதிவு செய்ய வில்லை.
இந்தியா வில் நடை முறையில் இருந்த சதி என்னும் கணவருடன் உடன் கட்டை ஏறும் முறை 1829ம் ஆண்டில் தடை செய்யப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments