தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மாநிலம் முழுவதும் கடந்த 3 நாட்களாக மாணவர்களின் போராட்டங்கள் வலுத்துவருகிறது.
மேலும், தடையை மீறி சில இடங்களில் ஜல்லிக்கட்டு அரங்கேறியது. அதுவும் சில நிமிடங்களில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னை மெரீனா, மதுரை அலங்கா நல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் கூடி விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு தற்போது நடிகர் லாரன்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் சென்னை மெரீனா கடற்கரையில் செய்தி யாளர்களிடம் பேசுகையில்,
நேற்றிரவு முதல் இங்கு உணவு மற்றும் மருந்துகள் இன்றி அவதிப்படுவதாக தனக்கு மெசேஜ் வந்ததாகவும்,
இந்தப் போராட்டம் வெற்றியடைய தம்பி, தங்கைகளுக்காக ரூ.1 கோடி செலவு செய்யத் தயார் என செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார்.
இந்த பேட்டியால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு இன்னும் உற்சாகத்தை கொடுத்துள்ளது எனக் கூறலாம்.