திருவான்மியூா் பகுதியில் உள்ளது பல வெளிநாட்டு ஐடி கம்பெனிகள். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞா்கள் மற்றும் பெண்கள் பணியாற்றி வருகின்றனா்.
ஐடி ஊழியா்கள் என்றால் அவா்கள் மெத்த படித்த மேதாவிகள். அதிகம் பேசக்கூட மாட்டார்கள். தன் வீட்டுக்கு பக்கத்தில் உள்ளவா்கள் யார் என்று கூட அவா்களுக்கு தெரியாது.
அவா்களுக்கு மன அழுத்தம் அதிகம். சம்பளம் அதிகம். சமைத்து சாப்பிட மாட்டார்கள். இவ்வாறு எல்லாம் பேர் உண்டு.
இந்த நிலையில் தமிழா்களின் உண்மை நிலையை உணா்ந்து, தமிழகத்தின் பாரம்பரியம், கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் அதிக அக்கரை செலுத்தி வருகின்றனா்.
இன்று மதியம் 1.30 மணிமுதல் ஐடி ஊழியா்கள் பணி செய்யவில்லை. போராட்டம் வெற்றியடைய வைத்து விட்டு தான் நாங்கள் வருவோம் என்றும் கூறுகின்றனா்.
இது ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவருக்கு சரியாகுமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.
ஆம் சரியாகும். வெளிநாட்டு நிறுவனங்கள் எவ்வளவு நேரத்தை போராட்டத்தில் செலவிடுகிறீர்களோ, அந்த நேரத்தை பணியில் பேலன்ஸ் செய்துக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளனா்.
இந்த வெளிநாட்டு கம்பெனிகளுக்கு உள்ள அக்கரை, தமிழக மக்களை வைத்து சம்பாதிக்கும் நடிகா், நடிகைகள், அரசியல் வாதிகளுக்கு இல்லையே என கிராமத்து இளைஞா்கள் வேதனை படுகின்றனா்.