ஜல்லிக்கட்டு அனுமதிக்கு பிரதமர் மோடி இன்று கை விரித்ததை யடுத்து, அடுத்து நடக்க இருக்கும் சம்பவங்கள் குறித்து போராட்டக் காரர்கள் கொதித்தெழுந் துள்ளனர்.
இது குறித்து தற்போது வாட்ஸ்அப்பில் பரவும் தவலில், நாங்கள் இப்படி உயிர் கொடுத்து மெரினாவில் போராடிக் கொண்டு இருக்கிறோம்.
ஆனால் அரசோ, அடுத்த வாரம் நடக்கவிருக்கும் இந்திய குடியரசு தின விழாவிற்கான ஒத்திகைக் காக மெரினா கடற்கரையை தயார் படுத்த ஆயத்தமாகி விட்டார்கள்.
எங்களைத் துரத்த ஆயிரக்கணக் கானக் காவலர்களை இறக்கியு ள்ளனர். அப்படி நடந்துவிட்டால் இரண்டு நாட்களாக போராடியது வீணாகி விடும்.
எனவே, சென்னையி லுள்ள அனைவரும் உடனே மெரினா வரவும். அரசு பத்தாயிரம் காவலர்களை இறக்கினால் நாம் 10 இலட்சம் பேர் வேண்டும்.
நமது ஒற்று மையைக் கண்டு இந்த அரசுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என வைரலாகும் வாட்ஸ்அப் தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.