ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில், அல்கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் இயக்கத்தை சேர்ந்த பயங்கர வாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இவர்கள் தான் அந்த நாட்டின் பல பகுதிகளை 2011–ம் ஆண்டுவரை தங்கள் பிடியில் வைத்தி ருந்தனர். இப்போது அவர்கள் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த நாட்டின் தலைநகரமான மொகாதிசுவில் உள்ள பிரசித்தி பெற்ற தயாஹ் ஓட்டலின் நுழைவு வாயிலில், நேற்று பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதினார்.
குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. அதே நேரத்தில் துப்பாக்கி ஏந்திய பயங்கர வாதிகள் ஓட்டலினுள் நுழைந்து, அங்கிருந்த பாதுகாவலர் களுடன் துப்பாக்கிச்ச ண்டை நடத்தினர்.
கார் குண்டுவெடிப்பு குறித்த தகவல் அறிந்து ஆம்புலன் சுகளும், பத்திரிகை யாளர்களும் அங்கு விரைந்த போது, அந்தப் பகுதியில் மற்றொரு கார் குண்டு வெடித்தது.
இந்த குண்டுவெடிப்புகளால் அந்தப் பகுதியே குலுங்கியது. பெருமளவில் கரும்புகை மண்டலம் உருவானது. 13 பேர் உடல் சிதறி உயிரிழந் ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
பயங்கரவாதிகள் 2 பேர் பலியான தாகவும் சொல்லப் படுகிறது. பலர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன் சுகளில் ஆஸ்பத்திரி களுக்கு எடுத்துச் செல்லப் பட்டனர். இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கர வாதிகள் பொறுப்பேற்றனர்.