சென்னை மெரினாவில் கடந்த 7வது நாளாக ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற கோரி போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பித்து உத்தர விட்டுள்ளது.
இந்த அவசர சட்டம் 6 மாதம் வரை மட்டுமே செல்லும் என்று கூறப்படுகிறது.
நேற்று மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அனைவரும் முதல்வர் பன்னீர் செல்வத்தை திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில் சென்னை மெரினாவில் போலீசார் அதிகளவில் குவிக்கப் பட்டுள்ளனர். போராட்டக் காரர்களை கலைந்து செல்ல காவல்துறை உத்தர விட்டுள்ளனர்.
ஆனால் போராட்டக் காரர்கள் நிரந்தர சட்டம் இயற்றும் வரை நாங்கள் போராட்டத்தை வாபஸ் வாங்க போவதில்லை என்று அறிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஜனவரி 26 குடியரசு தினம் வர இருப்பதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இதனால் சென்னை மெரினா அதன் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை சட்டம் அமலாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது.