பற்றி எரியும் ஜல்லிகட்டு தீக்கு வித்திட்ட 17 பேர் !

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என 16ம் தேதி மதுரை அலங்கா நல்லுரில் வலைதளம் மூலம்

பற்றி எரியும் ஜல்லிகட்டு தீக்கு வித்திட்ட 17 பேர் !
இணைந்த ஆயிரக்கணக் கான மாணவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறாததால், அங்கேயே உண்ணா விரதம் இருந்தனர்.

24 மணிநேரம் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த மாணவர்களில் 300 பேரை போலீஸார் கைது செய்தனர். சில இடங்களில் தடியடி நடத்தப் பட்டது.

இந்த தகவல் காட்டு தீயாக பரவியது. இன்று தமிழகம் மட்டும் இல்லாமல் உலக முழுவதும் தமிழர்கள் பல லட்சம் பேர் வீதிக்கு வந்து ஜல்லிக்கட்டுக்காக போராடி வருகின்றனர்.

சென்னை மெரினாவில் இன்று கட்டுக்கடங்காத பல லட்சம் தமிழர்கள் கூடி ஐந்தாவது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த லட்சம் மாணவர்கள் கூடுவதற்கு வித்தாக இருந்தவர்கள் மேலே படத்திலுள்ள 17 பேர் தான். 17ம் தேதி காலையில் இவர்கள் விதைத்த விதை இன்று மெரினாவில் மணல் தெரியாமல்,

மனித தலைகளாக தெரியும் அளவில் வித்திட்ட இவர்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. உங்கள் பாராட்டுகளை லைவ்டே மூலம் தெரிவியுங்கள். நாங்களும் பாராட்டுகிறோம்.
Tags:
Privacy and cookie settings