உணவாக 2 கிலோ மணல் சாப்பிடும் பாட்டி !

இந்தியாவின் வாரணாசி பகுதியைச் சேர்ந்தவர் குஸ்மாவதி (78). இவர் தன்னுடைய 15 வயதில் இருந்து மணல் சாப்பிட்டு வந்து ள்ளார்.

உணவாக 2 கிலோ மணல் சாப்பிடும் பாட்டி !
ஆனால் அவருக்கு இதுவரை எந்த ஒரு பாதிப்பும் வர வில்லை என்பது தான் ஆச்சரியமே.

இது குறித்து குஸ்மாவதி கூறுகையில், தான் கடந்த 63 வருடங்களாக மண் மற்றும் கிராவல் போன்றவற்றை தான் சாப்பிட்டு வருகிறேன். இதைத் தான் விரும்பி உண்ணுகிறேன். 

இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று கூறியுள்ளார். மணல் உண்ணு வதால் தனக்கு வயிற்று வலியோ மற்றும் பல் வலியோ போன்றவை வந்ததில்லை என்று கூறியுள்ளார். 
தன்னால் கடினமான கல்லை கூட கடித்து சாப்பிட முடியும், அதனால் தனக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்ட தில்லை என கூறியுள்ளார்.
பண்ணைத் தொழிலாளியாக வேலை செய்து வரும் இவர் தினமும் 2 கிலோ மணல் சாப்பிட்டு வருவதாக கூறி யுள்ளார். 

இது நாள் வரை அவர் மருத்து வரை சந்தித்ததே கிடையாது என்றும் தன்னுடைய இந்த ஆரோக்கியதிற்கு மணல் தான் காரணம் என கூறியுள்ளார்.

மேலும் அவர் இதை தன்னுடைய 15 வயதில் சாப்பிட ஆரம்பித்த தாகவும், அப்போது வயிறு வலித்த தாகவும், அதன் பின்னர் பழகி விட்டதாகவும் கூறியுள்ளார்.

தான் மணல் சாப்பிடுவதைப் பார்த்து தன் பேரக்குழந்தைகள் மணல் விரும்பி ஆகி விட்டதாகவும், இது ஒரு போதை என்று தன்னை மருத்துவமனைக்கு அழைத்த தாகவும் கூறியுள்ளார்.
தான் நன்றாக இருக்கிறேன், தான் ஏன் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வயதிலும் தான் ஆரோக்கிய மாக இருப்பதற்கு மணல் மற்றும் கிராவல் தான் காரணம் என்று அடித்து கூறுகிறார் குஸ்மாவதி.
Tags:
Privacy and cookie settings