ஜனவரி 26 முதல் பெப்சி, கோக் விற்பனைக்கு தடை !

1 minute read
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி அனைத்து தரப்பினரும் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை கண்டு இந்தியாவே மிரண்டு போய் உள்ளது.
ஜனவரி 26 முதல் பெப்சி, கோக் விற்பனைக்கு தடை !
இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வெளிநாட்டு குளிர் பானங்களான பெப்சி, கோக் மற்றும் பாண்டா போன்ற குளிர் பானங்களின் விற்பனை க்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் பெப்சி, கோக் பாட்டில் களை வாங்கி அதனை கீழே ஊற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் 70 சதவீதம் பெப்சி மற்றும் கோக் விற்பனை சரிந் துள்ளது.

இந்நிலையில் வரும் 26ம் தேதி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் விற்பனை க்கு தடை விதிக்கப்படும் என அறிவித்து உள்ளார். 
இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
Tags:
Today | 29, March 2025
Privacy and cookie settings