சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக் கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தி ற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப் பட்டுள்ளனர். அதில் மதுரையை சேர்ந்த காவலர் மதியழகுவும் ஒருவர்.
இவர் போராட்டக் காரர்கள் இடையே ஜல்லிக் கட்டுக்காக ஆதரவாக பேசினார். மேலும் இதனால் தனது வேலையே பறிபோனாலும் பரவாயில்லை என்று கூறி இருந்தார்.
எனவே அவரது வேலையும் பறிபோகும் என்று எதிர்பார்க்கப்ப ட்டது. ஆனால் காவலர் மதியழகு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.
இந்த நிலையில் மெரினாவில் பேசிய காவலருக்கு வேலை போனால் 30,000 ரூபாய் சம்பளத்தில் நான் வேலை தருகிறேன் என தனியார் நிறுவன மேலாளர் ஓருவர் அறிவித்து உள்ளார்.