செல்லாத பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு கடந்த டிசம்பர் மாதம் இறுதியுடன் முடிவடைந்த நிலையில், அதற்கு மேலும் ஒரு வாய்ப்பு தர ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி அறிவித்தார். நாட்டு மக்கள் தங்களிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதி வரை
வங்கிகளில் டெபாசிட் செய்து, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.
இதனால், அனைத்து வங்கிகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதிய நிலையில், காலக்கெடு விரைவாக முடிவடைந்தது.
இதனை யடுத்து, மார்ச் 31ம் தேதி வரை ரிசர்வ் வங்கி கிளைகளில் மட்டும் செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அனுமதி அளிக்கப் பட்டது.
ஆனால், ஒரேநேரத்தில் ஆயிரக்க ணக்கான மக்கள் ரிசர்வ் வங்கியை நோக்கி செல்வது இயலாத காரியம் என்பதால்,
செல்லாத ரூபாய் நோட்டுகளை மீண்டும் வங்கி களிலேயே டெபாசிட் செய்யும் வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந் துள்ளது.
இது தொடர்பாக, பல்வேறு தரப்பில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கைகள் முன் வைக்கப் படுவதால், மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கலாமா என்று, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இதனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு, பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.