சென்னை டூ குமரி 700 கிமீ மனிதசங்கலி போராட்டம் !

ஜல்லிக் கட்டிற்காக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வரும் மாண வர்கள் இன்று ஐந்தாவது நாளாக தொடர் போரட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை டூ குமரி 700 கிமீ மனிதசங்கலி போராட்டம் !
ஜல்லிக்கட்டு நடத்து வதற்கு தற்காலிக அவசரசட்டம் கொண்டு வரப்படும் அடுத்த இரண்டு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பன்னீர் அறிவித்தார்.

ஜல்லிக்கட்டு தற்காலிக சட்டமாக இருக்க கூடாது அது நிரந்தர சட்டமாக இருக்க வேண்டும். 

அதற்கான சட்டத்தை கொண்டு வர வேண்டும் நாங்கள் ஐந்து நாட்கள் நடத்திய தொடர் போராட்டத்திற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும் என மாணவர்கள் போராட்டத்தை கைவிட வில்லை.

இந்த போராட்டம் என்பது இது வரை உலக நாடுகளில் இதுவரை நடக்காத ஒரு போராட்டமாக மாறி விட்டது.

இன்று மாணவர்களுக்கு ஆதவராக தமிழகம் அறிவிக்கபடாத பந்த்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில், போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடிவு செய்துள்ளனர்.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை 701 கிலோ மீட்டர் துரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். ஒரு மீட்டர் துரத்திற்கு 2 நபர் வீதம் ஒரு கிலோ மீட்டர் 2 ஆயிரம் பேர் என கணகிட்டு,

701 கிலோ மீட்டர் துரத்திற்கு 14 லட்சத்து, இரண்டு ஆயிரம் பேர் தேவை என்றும் நாளை காலை 9 மணிக்கு இந்த போராட்டம் தொடரவுள்ளது என்றும் வலை தளத்தில் வைரலாக தகவல் பரவி வருகிறது.

Chennai to kanniya kumari *Human Chain* tomorrow 9pm *Chennai to Kanyakumari = 701 Kms* One meter can accommodate 2 people. So for *1 Kms = 2000 people* For *701kms = 14, 02, 000 people*. Adding some bridges and other elevations in the route = 30kms extra. So totally *731kms = 14, 62, 000 people* . *_Yes it’s possible_*. *_Share Plz…_*
Tags:
Privacy and cookie settings