உணர்வு என்று வந்து விட்டால் மதம், இனம், ஜாதி, அனைத்தும் மறந்து கை கோர்ப்பது தான் நமது இந்திய தேசத்தின் பலம். அது மீண்டும் இரண்டாவது முறையாக நிரூபணம் ஆகி விட்டது.
போன வருடம் பெய்த பேய் மழை, பெரும் வெள்ளம் வந்து சென்னை மக்கள் செத்துக் கொண்டிருந்த போது, பாய்மார்கள் தாய்மார்கள் ஆனார்கள்.
கழுத்தளவு தண்ணீரில் முஸ்லிம் இளைஞர்கள் ஆயிரக் கணக்கான மக்களை மீட்டார்கள். உணவுகள் தாயாராகிக் கொண்டே இருந்தது. அதை சுமந்து வந்து மக்களின் பசி ஆற்றிக் கொண்டே இருந்தார்கள்.
இந்துக் கோவிலை சுத்தம் செய்தார்கள். குறிப்பாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி இளைஞர்கள், ஏரியா ஏரியாவாக களம் இறங்கினார்கள்.
வீட்டுக்குள் செத்துக் கிடந்த ஒரு ஹிந்து அன்னையை கயிறு கட்டி இறக்கி தோளில் சுமந்தார்கள்.
இதோ மீண்டும் களம் இறங்கிய முஸ்லிம் அமைப்புகள், இரவு பகலாக குடும்பம் குடும்பமாக கைக் குழந்தை களுடன் போர்க் களத்தில் இருக்கிறார்கள்.
சில முஸ்லிம் அமைப்புகள் உணவுப் பொட்டலங்கள், தண்ணீர், மாத்திரை போன்றவற்றை தமிழ்நாடு பூராவும் போர்க்கள மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
இது தாண்டா இந்தியா. இது தாண்டா தமிழர்கள். வெல்லட்டும் மத நல்லிணக்கம். வாழ்க தீவிர மக்கள் வாதம்.