இந்த 3 நடிகர்களும் செய்திருக்க வேண்டியது என்ன?

ஜல்லிகட்டு போராட்டத்தை தீவிரமாக ஆதரித்த ஊடகம் லைவ் டே தமிழ்நாடு. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை நடிகர்கள் ஆதி, லாரன்ஸ், பாலாஜி ஆகியோரை கதாநாயர்களாக காட்டிய ஊடகம் லைவ் டே.
இந்த 3 நடிகர்களும் செய்திருக்க வேண்டியது என்ன?
ஆனால் தற்போது, இந்த மூன்று நடிகர்களின் ஆதரவாளர்கள், இவர்களை பற்றி எந்த செய்தியும் எழுதக் கூடாது என்கிற ரீதியில் நம்மை மிரட்டும் வகையில் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த மூன்று பேரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட வானவர்கள் அல்ல. இந்த நாட்டிற் காகவும், மக்களு க்காவும் எல்லா வற்றையும் துறந்தவர்கள் அல்ல.

மக்களின் ஒரு பிரச்சனைக்கு போராட வந்து விட்டு, பாதியிலேயே விட்டு விட்டு ஓடுவது தான் ஒருவரின் தலைமை பண்பா?

வரலாறு காணாத ஒரு போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருந்த போது, அந்த போராட்டத்தை முடிக்கும் லட்சணம் இவ்வளவு தானா?
இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். இவ்வளவு பெரிய கூட்டம் கூடியுள்ளது. இதனை ஒறுங்கி ணைப்பது கடினம் தான். ஆனால் வேறு வழியில்லை.

இந்த போராட்டத்தை ஆதரிக்கும் பிரபலங்களை முதலில் ஒறுங்கிணைத் திருக்கலாம். ஒவ்வொரு ஊரில் இருந்தும் ஒரு பிரதிநிதியை தேர்தெடுத்து போராட்ட ஒறுங்கிணைப்பு குழுவை உருவாக்கி இருக்கலாம்.

பின்னர் போராட்டத்தின் அடுத்தகட்டம் என்ன என்பது குறித்து ஆலோசனை நடத்தி யாருக்கும் பாதிப்பு இல்லாமல் தீர்மானங்களை அரசிடம் கொடுத்து, அரசுக்கு கெடு விதித்திருக் கலாம்.

இதற்கெல்லாம் சில நாட்கள் செலவாகத் தான் செய்யும். அதுவரை அமைதியாக போராட்டத்தை தொடருமாறு மக்களை கேட்டுக் கொண்டிரு க்கலாம்.
ஏனென்றால் இது போன்ற ஒரு கூட்டம் பொதுப் பிரச்சனைக்காக இனி எப்போது கூடும் என்பது யாருக்கும் தெரியாது.

இவற்றை யெல்லாம் செய்திருந்தால் மக்கள் இந்த அளவிற்கு கூடியதற்கும், உலகம் முழுவதும் நம்மை கூர்ந்து நோக்கியதற்கும் ஒரு அர்த்தம் கிடைத்திருக்கும்.

ஆனால் இவை எதனையும் செய்யாமல், திடீரென போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவிப்பதும், சில சக்திகள் உள்ளே புகுந்து விட்டன என்று கூறுவதும் வேடிக்கை யாவே உள்ளது.

அரசும், இந்த 3 நடிகர்களும், ரஜினி காந்த் உள்ளிட்ட இன்னும் பல நடிகர்களும் சொல்லிய பிறகும் தற்போதும் தமிழகம் முழுவதும் பரவலாக போராட்டம் நடை பெற்றுத் தான் வருகிறது.
ஆனால் வன்முறை போராட்டமாக அது மாறி வருகிறது. இதற்கு யார் காரணம்? அமைதியாக போராடியவர்கள் வன்முறை பக்கம் மாறிய நிலையில் அவர்களை தடுக்காமல், விலகி நிற்பது தான் நியாயமா?

இந்த சம்பவங்கள் இந்த 3 நடிகர்களின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை யை தகர்த்திருக்கச் செய்திரு க்கிறதே தவிர வேறும் எதுவும் நடந்து விடவில்லை.
Tags:
Privacy and cookie settings