நடிகனை பார்க்க திரண்ட கூட்டத்தில் சிக்கி ஒருவர் பலி !

0 minute read
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சாருக்கான் தனது ரயீஸ் படத்தை பிரபலப்படுத்து வதற்காக வட மாநிலங்களில் ரயிலிலேயே சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
நேற்று குஜராத் மாநிலத்திற்கு சென்ற போது, வதோதரா ரயில் நிலையத்தில் சாருக்கானை பார்க்க பெரும் கூட்டம் திரண்டு இருந்ததால், 

அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 45 வயதுடைய பர்கீத் கான் பதான் என்பவர் நெஞ்சுவலி வந்து உயிரிழந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து சாருக்கானின் பயணத்தை போலீசார் கண்காணிக்கத் தொடங்கி யுள்ளனர். 

இந்த சம்பவம் தன்னை வேதனை படுத்தியுள்ளதாக சாருக்கான் தெரிவித்தார்.

அதே நேரம் இன்று அவரை காண டெல்லி ஹஜரத் நிசாமுதீன் ரயில் நிலையத்தில் ரசிகர்கள் பல்லாயிரக் கணக்கில் கூடினர். நடிகரை நடிகராக பார்க்கும் காலம் எப்போது வருமோ?
Tags:
Today | 6, April 2025
Privacy and cookie settings