போராட்டக்கள மென்பது இப்படியும் இருக்கலாம் என்பதற்கு உலகுக்கே எடுத்துக் காட்டாய் நின்றிருப்பது தமிழ் இனம் என்ற பெருமையுடன் இதை எழுதுகிறேன்.
எதிரியை பணியவைப் பதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, பலத்தை வெளிப்படுத்தி கலங்கடித்து பின் வாங்க வைப்பது.
இரண்டாவது, கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு, நாம் மகிழ்ச்சியாய் இருந்து எரிச்சலடைய வைத்து அவர்களது உணர்வுகளை வெளிக் கொண்டு வருவது.
இதில், இரண்டாவது தான் தமிழ் மக்கள் கைக்கொண்ட யுக்தி. பா.ஜ.க-வின் சுப்ரமணிய சாமி, பீட்டாவின் ராதா ராஜன் ஆகியோர் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேச முடியுமோ அவ்வ ளவுக்கும் பேசியது,
அவர்கள் எரிச்சலடைந் ததால் தான். போராடு கிறார்க ளென்றால் கஷ்டப்பட வேண்டும், வருத்தப்பட வேண்டு மல்லவா? ஆனால், இவர்கள் என்ன செய்து கொண்டிரு க்கிறார்கள்?
ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம். தமிழகத்தைச் சார்ந்த கலைக் குழுக்கள் மெரினாவில் முகாமிட்டு, அவர்களுக்குள் பேசி நேரம் ஒதுக்கி ஒவ்வொருவராக மக்களை மகிழ்விக்கிறார்கள்.
போருக்கு சென்ற மன்னர்களே, தங்கள் படையுடன் கலை ஞர்களை அழைத்துச் சென்ற வரலாற்றைக் கொண்டது
தமிழினம் எனும் போது, கிடைத்து விடும் எனத் தெரியும் உரிமைக்கான போராட்டத்தில் அழுது கொண்டா இருப்பார்கள்?
போராட்டத்தை கலை சார்ந்த விழாவாக கொண்டாடும் வழக்கமுடைய கோவன் மொத்த மக்களையும் தன் பாடல்களால் கட்டிப் போட்டார்.
மாநில அரசிலிருந்து, மத்திய அரசுவரை செய்யும் அரசியல் அவரது பாடலை எதிரொலித்தது.
பீட்டாவை யெல்லாம் பொடிப் பொடியாக தகர்த்து விட்டார். விவேகானந்தர் இல்லத்தின் வாசலில் தொடங்கிய இந்த போராட்டக் காரர்களின் வரிசை, அலைகள் கடல் சேரும் இடம்வரை நீண்டிருக்கிறது.
மணல் மேடுகள் தலைய ணையாகின. தார்ப்பாய்கள் போர்வை களாயின. தடுக்கி விழவைத்த கட்டைகள் எல்லாம் தீமூட்ட உதவி செய்தன. கடுங்குளிரை தீமூட்டங்கள் பொசுக்கின.
ஒரு பக்கம் ஆடுகிறவர்களும், பாடுகிற வர்களும் தங்களது கலையால் போராட்டக் காரர்களை உற்சாகப் படுத்திக் கொண்டிருக்க, மற்றவர்கள் மெரினாவை சுத்தப்படுத்திக் கொண்டி ருந்தனர்.
தற்காலிக கழிவறை களிலிருந்து வெளியேறிய அசுத்த நீரினால் நோய் பரவிவிடக் கூடாதென பிளீச்சிங் பவுடர் களையும்,
நீர் எங்கும் பரவி விடக் கூடாதென கடல் மண்ணையும் ஒரு இளைஞர் பகுதி தூவிக் கொண்டிருந்தது.
அத்தனைப் பெரிய கடலிருந்தும், சுத்தப் படுத்தப்படாத அந்த கழிவறை களுக்காக வரிசையில் நின்றிருந்த ஆண்களையும்
பெண்களையும் பார்க்கும் போது வெறும் ஆர்வத்தால் கூடிய கூட்டம் இதுவல்ல வென்பது தெளிவாக விளங்கியது. அடுத்து என்ன?
ஜல்லிக் கட்டுக்காக மத்திய, மாநில அரசுகள் இறங்கிவர ஆரம்பித்துவிட்டன. தேடிய வெற்றி கிடைத்து விடும்.
ஆனால், இங்கு கூடிய கூட்டம் அடுத்து என்ன செய்யப் போகிறது? முக்கியமாக, ஏதோ விடலைப் பயல்கள் என
தவிர்த்து விடாமல் ஆதரவு கொடுக்க குடும்பத்தோடு வந்த மக்கள் என்ன நினைக் கிறார்கள் என மெரினா முழுக்கவும் சுற்றி சில கேள்விகளை முன் வைத்தோம்.
சென்னை ஆவடியைச் சேர்ந்த முருகன், இரண்டு மகள்கள், ஒரு மகன், அம்மா, மனைவி ஆகியோருடன் வந்திருந்தார்.
அவரது மகன், சுத்தப் படுத்தும் வேலைகளைக் கவனிக்கச் சென்று விட, அவர்கள் கோவனின் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அவரிடம், அடுத்து என்ன சார் செய்யப் போறீங்க? என்றோம். முதல் வேலையா காலைல முடிஞ்ச அளவு சுத்தப்படு த்தனும் சார்.
குப்பைகளை அகற்றிட்டு, இது வரைக்கும் யாரும் பார்க்காத மெரினாவை போராட்டத்துல கலந்துக் காதவங்களுக்கு கொடுக்கணும் என்றார்.
வாட்ஸ்-அப் குரூப்களில் வலம்வரும் ஒரு மெஸேஜ் மனதிலேயே இருந்தது.
இனி வருடா வருடம் சென்னை மக்கள் மெரினா கடற்கரையில் பொங்கல் வைத்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட் டத்தை நினைவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டு மென்பது அந்த மெஸேஜ்.
இதைப்பற்றியக் கருத்தை முருகனிடம் கேட்டோம். நல்ல முடிவு சார். திரு விழாக்களே மக்கள் ஒருத்தருக் கொருத்தர் பழகிக் கொண்டாட உருவானது தான்.
ஆனா, சென்னைல அது ஒரு குடும்பத்துக் குள்ளவே சுருங்கிப் போயிடுது. மிஞ்சிப் போனா, சொந்தக் காரங்க அவ்வளவு தான்.
அப்படி ஒரு முயற்சி செஞ்சா நல்லா இருக்கும். நான் சொந்தக்காரங்க மொத்தப் பேரையும் கூட்டிட்டு வந்துருவேன் என்றார்.
கொண்டாட்ட த்துக்கு குறைவில்லாத சென்னையில், இப்படியொரு எக்கமா? என்ற எண்ணத்தில் தொடர்ந்து கேள்விகளை பலரிடம் கேட்டோம்.
இன்றைய கொண்டாட்டத்தின் அடையாளமாக வருடாவருடம் மெரினாவில் பொங்கல் வைக்கத் தயாரா? என 5 பெண்களாக உட்கார்ந் திருந்தவர் களில், மத்திய வயதினரான மாதவியிடம் கேட்டோம்.
அவர் அருகிலிருந்த பாட்டியம்மா பதில் சொன்னார். இப்பவாவது ஒரு பிரச்னை இருக்கு.
அந்தப் பிரச்னையும் தீர்ந்துபோய், சந்தோஷமா எல்லாரும் ஒரு விழா கொண்டாடுனா நல்லா இருக்காதா என்ன? யாருன்னே தெரியாத ஒரு தம்பி தண்ணி கேன் குடுத்துட்டு போறான்.
இதெல்லாம் அவனுக்கு யார் சொல்லிக் கொடுத்தி ருப்பாங்க. நாலு பேரோட சேர்ந்ததும் தானா தோணுதில்ல.
அது தான் தம்பி என்னைக்கும் நிலைக்கும் என்று கனீரென பேசினார். அந்த பாட்டியம் மாவின் தலைமையில் தான் அத்தனைப் பெண்களும் வந்திருந்தனர்.
மிகவும் தேர்ந்த உடைகளை உடுத்தி, தனது பிள்ளைகளை ரோட்டில் டேன்ஸ் ஆடு, போடு போடு என ஊக்கப் படுத்திக் கொண்டிருந்த வைபவ் அவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக பேசினார்.
என் பக்கத்துவீட்டுல இருக்கவங்க கூட பேசமாட் டாங்க. வெளிய நிறைய பேர் நிக்குறத பாத்தாலே கதவை மூடிக்கு வாங்க.
இன்னைக்கு இந்தப் போராட்டத்துக்கு வர்றீங்கா ளான்னு கேட்டவங்களே அவங்க தான். முதல்ல நான் ஏன் கேக்கலைன்னு அப்ப தான் யோசிச்சேன்.
இது சாதாரண விஷயமில்லை. ஃபாரீன்ல இருந்து என் ஃபிரெண்டு ஃபோன் போட்டு என்ன நடக்குது தமிழ் நாட்டுலன்னு கேட்டான்.
விவரமா சொன்னதும், நானும் அந்த விளை யாட்டைப் பாக்கணும். நெக்ஸ்ட் டைம் வர்றேன்னு சொல்லிருக்கான்.
அவன் நெக்ஸ்ட் டைம் வரவான்னு கேக்கும்போது ‘சாரி நாங்க தோத்துட்டோம்’னு சொல்லக் கூடாது பாருங்க. அதான் குடும்பத்தோட ரெண்டாவது நாளா இங்க இருக்கோம் என்றார்.
என்ன நடக்கிறது தமிழ்நாட்டில். பொங்கல் என்பது யாருக்கான விழா என்ற கேள்விகளுக்கு இனி தேவையே இல்லாத வகையில்
இப்படி ஒரு மாற்றத்தை சாதித்த இளைஞர் படை என்ன செய்து கொண்டிரு க்கிறது எனப் பார்த்தால்,
மேடைகளையும், மைக்கு களையும் மற்றவர்களிடம் கொடுத்து விட்டு சாலைகளிலும், மெரினாவை தூய்மைப் படுத்துவதிலும் இறங்கி யிருந்தனர் அவர்கள்.
சிறு குழந்தையை மண்ணில் விளையாடவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கணவன் மனைவியை அணுகினோம்.
பெயர் சொல்ல மறுத்து விட்டு பேசிய அவர்கள் இன்னைக்கு ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை நடத்தினது தமிழர்கள்.
அதே மாதிரி எந்த பாரபட்சமும் இல்லாம எல்லா இடத்துலயும் எல்லா மக்களையும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கணும்.
எங்கயாவது ஜாதியின் பேரால ஜல்லிக்கட்டு நடக்குதுன்னு தெரியவந்தா இதே சென்னை மக்கள், அந்த இடத்தை முற்றுகை யிடணும்.
ஜாதியில்லாத தமிழினம் அப்ப தான் உருவாகும் என்றனர். அவரது குழந்தையின் பெயரைக் கேட்டோம், தமிழினி என்றார்.
முக்காடிட்டு அமர்ந்தபடி கைதட்டிக் கொண்டிருந் தவரிடம் அடுத்த பொங்கல் எப்படி? எனக் கேட்டதும், பசங்க சொல்லிட்டாங் கல்ல செஞ்சிருவோம் என்றார்.
மதன்குமார் குடும்பத்துடன் பப்பாளிப் பழமும், தர்பீஸ் பழமும் வாங்கிக் கொண்டிருந்தார். என்ன சார் போராட்டம் பண்ணலயா? என்றோம்.
இதோ அதான பண்ணிக்கிட்டு இருக்கேன். பாப்கார்ன் சிக்கன். பர்க்கர் வாங்கிக் கொடுக்காம தள்ளு வண்டிக் கடைல பழம் வாங்கித் தர்றனே
இது போராட்டம் இல்லையா? என்று சிரித்தபடி பணத்தை நீட்டியவரிடம், கடைக்காரர் பணம் வேண்டாம் என்றார்.
மதன்குமாரை செல்லவிட்டு, கடைக்காரரைப் பிடித்தோம். ஏன் பணம் வாங்கல? நான் ரெண்டுநாளா வண்டி இல்லாம தான் தம்பி வந்து இங்க இருந்தேன்.
இன்னைக்கு பழமெல்லாம் பழுத்துருச்சு. வேஸ்டா போயிருமேன்னு கடையைத் தள்ளிக் கிட்டு வந்தேன்.
பாதிப் பழத்துக்கே நான் செலவு பண்ண பணம் வந்துடுச்சு. வியாபாரம் பண்ண மனசில்லாம, மத்த பழத்தை வெட்டி சும்மாவே குடுத்துக் கிட்டு இருக்கேன்.
யார் யாரோ எங்கெங்கயோ இருந்து என்னென்னமோ பண்றாங்க. நான் என்னால முடிஞ்சதைப் பண்றேன் என்றார் பட்டினப்பாக்கத்து பாலு.
எல்லா கடைகளும் திறந்திருந்தன. சிப்ஸ், பழம், டீக்கடை, ஸ்வீட் சோளம் என அனைத்துக் கடைகளின் விளக்கும் எரிந்து கொண்டே இருக்கிறது. இளைஞர்கள் படை, ஓய்வெடுக்க பஜ்ஜிக்கடையை வட்ட மிட்டிருந்தனர்.
இன்னொரு பக்கம் தீமூட்டி கானாப் பாடல்களை இசைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கும் பின்னால் ஒரு பெண்கள் குழு மணல் பறக்க ஆட்டத்தில் வீடு கட்டிக் கொண்டிருந் தார்கள்.
எத்தனைப் பேர் பார்க்கிறார்கள் என அஞ்சவில்லை. சமூகம் ஏசுமோ எனத் தயங்க வில்லை.
இசைக்கப்படும் ஒலிக்கு தனது கைகளும், கால்களும், உடலும் எப்படி இயங்க நினைக்கிறதோ அதை அதன் போக்கில் அப்படியே விட்டு சுழன்று கொண்டிருக் கின்றனர்.
போராட்டத்தை முடிக்க சொல்லிட்டாங்க என்ற தகவல் வந்து சேர்ந்ததும், அதெல்லாம் முடியாது. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை நகர மாட்டோம் என அதிரவைக்கும் குரல்கள் எழுகின்றன.
ஆரம்பத்தி லிருந்தே போராடிக் கொண்டிரு க்கும் சிவசேனாதிபதி ஐயா வீடியோவில் சொல்லியி ருக்கிறார் என்று சொன்ன போதும் கூட என் மாடுக்கும்,
விவசா யிக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என எல்லாபக்கமும் குரல் எழுகின்றது.
எந்த சமரசத் துக்கும் இளைஞர் படை தயாராக இல்லை. நிரந்தர தீர்வு ஒன்றே அவர்களது குறிக்கோளாக இருக்கிறது.
அலங்கா நல்லூரில் நாளை அரசு அதிகாரம் செலுத்தப் போகிற தெனச் சொல்லி வாகனங்கள் சென்னை யிலிருந்து கிளம்பிய போது சாரை சாரையாய் மக்கள் அவற்றில் நிரம்பி விட்டனர்.
அவர்களில் பலர், நண்பர்களுக்கு ஃபோன் செய்து, நான் மதுரை போறேன். நீ தூங்குனது போதும் கிளம்பி மெரினா வந்துடு என்று சொல்லி விட்டுச் செல் கிறன்றனர்.
மாற்றத்துக்கான விதை தமிழகத்தில் விதைக்கப் பட்டிருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் முன்னோடியாக தமிழன் நின்றி ருக்கிறான். முக்கியமாக இளைஞர்கள் நின்றிருக் கிறார்கள்.
சொந்த உரிமை யாகவே இருந்தாலும், போராடினால் தான் கிடைக்கும். போராடினால் கண்டிப்பாக கிடைத்து விடும் என நிரூபித்து விட்டார்கள்.