அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் செருப்பில் காந்தியடிகளின் படத்தை போட்டு ஒட்டு மொத்த இந்தியர்களையும் இழிவு படுத்தியுள்ளது.
காந்தி படம் அச்சிடப்பட்ட அந்த செருப்பு விலை ரூ.1190 என்றும் வெப்சைட் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவிலும் ஆன்லைன் வணிகம் செய்து வருகிறது. அண்மையில் இந்நிறுவனம் தனது வெப்சைட்டில் வீட்டு வாசலில் போடப்படும் மிதியடி பற்றிய ஒரு விளம்பரத்தை வெளியிட்டது.
இந்திய தேசிய கொடி போல இருந்த அந்த மிதியடிக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
அமேசான் நிறுவன அதிகாரிகள் விசா திரும்பப் பெறப்படும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எச்சரித்த பிறகே அமேசான் நிறுவனம் பணிந்தது.
அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், இந்திய சட்டத்துக்கு கட்டுப் படுவதாகவும், இந்தியர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறி இருந்தது.
இந்த சம்பவம் நடந்த ஓரிரு நடந்த ஓரிரு நாட்களிலேயே அமேசான் நிறுவனம் மகாத்மா காந்தியின் படம் வறையப்பட்ட படத்தை தனது வெப்சைட்டில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
அதன் விலை 1190 ரூபாய் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அமேசான் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவை இழிவுப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவது இந்தியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.