கூகுள் தன் முயற்சிகளில் திருப்தியடையாமல் தன்னை மேம்படுத்திக் கொண்டே இருப்பதாலே இன்னும் இணைய உலகில் முன்னிலை வகித்து வருகிறது.
தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று பார்ப்போம். உலகம் வேகம் வேகம் என்று மாறி வருகிறது.
எதிலும் வேகம், விரைவாகக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாகப் படிப்பதில் சுருக்கமாக வேகமாக எதிர்பார்க் கிறார்கள். என்னைப் போன்று பெரிய கட்டுரையாக எழுதுபவர்க ளுக்குச் சிக்கலாகி வருகிறது
தற்போது இணையத்தில் கணினி வழியாகப் படிப்பவர்களின் எண்ணிக் கையைத் திறன்பேசி (Smart Phone) வழியாகப் படிப்பவர் களின் எண்ணிக்கை முந்தி விட்டது.
ஒரு ஆய்வு கூறுகிறது, திறன்பேசியில் படிப்பவர்கள் ஒரு சுட்டியை (Link) க்ளிக் செய்து அது 3 நொடிகளில் திறக்க வில்லை என்றால், அதைப் புறக்கணித்து விடுகிறார்கள் என்று.
இதைப் பெரும்பாலான நேரங்களில் நானே செய்து கொண்டு இருப்பதால், மறுக்க முடிய வில்லை. ஒருவரின் பொறுமை அவ்வளவு தான் தற்போது.
எனவே, காத்திருப்பதில் பொறுமை குறைந்த வர்களைப் படிக்க வைக்க என்ன வழி என்றால், அவர்களுக்கு வேகமாகச் செய்திகளைக் கொடுப்பது. அப்படி என்றால் என்ன செய்ய வேண்டும்?
இங்கே தான் வருகிறது கூகுள் AMP (Accelerated Mobile Pages). திறன்பேசியில் படிப்பவர்களைக் கவர்வதற்கான தொழில் நுட்பம்.