அ.தி.மு.க.,வில் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் ஜெ.,மறைந்த சில நாட்களில் சசிகலா பதவிக்கு வர ஏன் துடிக்கிறார் என கேள்வி எழுப்பினார்.
இவருக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், அவர் மக்கள் விருப்பப் படி தான் வருங் காலங்களில் செயல்பட போவதாகவும்,
தீபா பேரவையில் இணைந்து செயல்படபோவதாக கேட்ட கேள்விக்கு அதுவும் நடக்கலாம் என கூறினார். விரைவில் தனது முடிவை அறிவிக்கப் போவதா கவும் கூறியிருந்தார்.
நாளுக்கு நாள் சசிகலா விற்கு எதிர்ப்பு பெருகியும் தீபாவிற்கு ஆதரவு பெருகியும் வருகிறது? தீபாவுக்கு பெருகி வரும் ஆதரவு சசிகலா தரப்பின ருக்கு கிலி ஏற்படுத்தி யிருப்ப தாகவும் கூறப்படுகிறது.