எமது Android சாதனத்தில் தரப்பட்டுள்ள Volume button ஆனது Android சாதனத்தில் இருந்து வெளிப்படக் கூடிய ஒலியின் (சத்தம்) அளவை கூட்டிக் குறைப்ப தற்காகவே தரப்பட் டுள்ளது.
எனினும் Quick Click எனும் Android சாதனத்துக் கான செயலியானது Volume Button மூலம் பல பயனுள்ள வசதிகளை பெற்றுக் கொள்ள வழி வகுக்கின்றது.
இந்த செயலியின் உதவியுடன் உங்கள் Android சாதனத்தில் இருக்கக் கூடிய Volume Button களை பயன்படுத்தி புகைப்படங்கள் எடுக்கவும், வீடியோ கோப்புக்களை பதிவு செய்யவும், Flashlight ஐ ஒளிரச் செய்யவும்,
குரல் பதிவுகளை மேற்கொள்ளவும், குறுஞ் செய்திகளை அனுப்பவும், அழைப் புக்களை ஏற்படுத்தவும், எந்த ஒரு செயலியையும் திறந்து கொள்ளவும் என ஏராளமான செயற்பாடுகளை செய்து கொள்ள முடியும்.
Quick Click செயலியை எவ்வாறு பயன்படுத்துவது?
இந்த செயலியை நிறுவி திறந்து கொண்ட பின் Volume Button மூலம் எவ்வாறான செயற்பாட்டை செய்ய விரும்புகிறீர்களோ அதனை தெரிவு செய்ய வேண்டும்.
உதாரணத் திற்கு நீங்கள் Volume Button மூலம் புகைப் படங்களை எடுக்க விரும்பினால் Photo என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
பின்னர் தோன்றும் அடுத்த பகுதியின் மூலம் குறிப்பிட்ட செயற்பாடு தொடர்பான மேலதிக வசதிகளை தெரிவு செய்து Ready என்பதை சுட்ட வேண்டும்.
உதாரணத்தின் படி நீங்கள் Photo என்பதை தெரிவு செய்தி ருந்தால், குறிப்பிட்ட புகைப்படம் பிடிக்கப்பட வேண்டிய கேமரா எது?
(Back Or Front) அந்த புகைப்படத்தின் தரம் எவ்வாறு இருக்க வேண்டும்? (High, Medium, Low), புகைப்படம் பிடிக்கப்படும் போது Flash மற்றும் Auto-focus வசதி செயற்படுத்தப் பட வேண்டுமா?
புகைப்படம் சேமிக்கப்பட வேண்டிய இடம் எது? புகைப்படம் பிடிக்கப் பட்ட பின் குறிப்பிட்ட புகைப்படம் திறக்கப்பட வேண்டுமா?
அல்லது Gallery திறக்கப்பட வேண்டுமா? என்பவைகள் தொடர்பான அமைப்புக்களை தெரிவு செய்ய வேண்டும்.
அடுத்து தோன்றும் சாளரத்தில் Volume Button அழுத்தப்படும் முறையை தெரிவு செய்ய வேண்டும்.
உதாரணத்திற்கு அந்த சாளரத்தில் தரப்பட்டுள்ள ஒன்றன் பின் ஒன்றான கட்டங்களில் முதல் கட்டத்தில் ஒன்றை "+" ஆகவும்,
அதற்குக் கீழ் தரப்பட்டுள்ள இரண்டாவது கட்டத்தில் "-" என்பதையும் நீங்கள் தெரிவு செய்திருந்தால்
குறிப்பிட்ட செயற்பாடானது Volume Button ஐ மேல் ஒரு முறை அழுத்தி விட்டு கீழ் ஒரு முறை அழுத்தும் போது குறிப்பிட்ட செயற்பாடு இடம் பெரும். (உதாரணத்தின் படி புகைப்படம் பிடிக்கப்படும்)
இதனடிப்படையில் வெவ்வேறு செயற் பாடுகளுக்கும் வெவ்வேறான படிமுறைகளை அமைத்துக் கொள்ளலாம்.
இறுதியாக குறிப்பிட்ட செயற்பாடு இடம்பெரும் போது Vibrate அல்லது சத்தம் ஏற்படுத்தப் பட வேண்டும் எனின் அதனை தெரிவு செய்த பின் Finish என்பதை அழுத்த வேண்டும்.
இந்த செயலியை தரவிறக்க Ckick to Download QUICKCLICK APPLICATION
இனி நீங்கள் இட்ட கட்டளைக்கு ஏற்ப Volume Button ஐ அழுத்தும் போது குறிப்பிட்ட செயற்பாடு இடம் பெறும்.