ஜெயலலிதா மறைவை யொட்டி பொதுச் செயலாளராக அவரின் தோழி சசிகலா தேர்ந்தெடுக்கப் பட்டார். தொடர்ந்து அவரை முதல்வராக்கவும் அதிமுகவி னரிடையே தற்போது ஆதரவு வலுத்து வருகிறது.
இந்நிலையில், சசிகலா பொதுச்செயலாளராக கடந்த 31ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதனை யடுத்து முதல் முறையாக கட்சி அலுவலகத்தில் அவர் உரையா ற்றினார்.
அந்த உரையில், எம்ஜிஆர் உருவாக்கிய கழகத்தை ஜெயலலிதா எப்படி காப்பாற்றினார்? ஜெயலலிதாவின் மரணத்துக் கான விளக்கமும், தனக்கும் ஜெயலலிதாவு க்குமான நட்பு குறித்தும்,
ஜெயலலிதாவுக் காக செய்த தியாகங்கள் என்னென்ன எனவும் மிக உருக்க மாகவும் தெளிவாகவும் அந்த உரை தயாரிக்கப் பட்டிருந்தது.
கைதேர்ந்த அரசியல் வாதியின் உரையைப் போன்று, சசிகலாவை எதிர்ப்பவர்கள் கூட உரையை கேட்டால் அவர் பக்கம் திரும்பும் அளவுக்கு பல சென்டி மென்ட்டுடன் உரை தயாரிக்கப் பட்டிருந்தது.
இதை மூத்த பத்திரிகை யாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
சசிகலாவை முதல்வர் பதவியில் அமர்த்தியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது கணவர் நடராஜன் தலைமையில் கவிஞர் உள்ளிட்ட 3 பேர் குழு அந்த அறிக்கையை தயாரித்ததாக தகவல் கசிந்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் போன்று உரையின் இறுதியில் கூறுவதற்கு ஒரு குட்டிக் கதையை தயாரித் ததாகவும், ஆனால் உரையின் முடிவில் அதை கூறாமல் தவிர்த்து விட்டதாகவும் சொல்லப் படுகிறது.
அப்படி ஒரே அடியாக ஜெயலலிதாவை பின்பற்றினால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அறிவுறுத்தப் பட்டதாகவும், இனிவரும் காலங்களில் குட்டிக் கதையை பின் பற்றிக் கொள்ளலாம் என தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி யுள்ளது.