ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தில் நேற்று இரவு (வெள்ளிக்கிழமை இரவு) திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இச்சட்டத்துக்கு குடியரசு தலைவர் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகமே ஒப்புதல் அளிக்கலாம்
எனத் தெரிய வந்தமையால், அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்டு நேரடியாக இன்று (சனிக்கிழமை) காலை சென்னை அனுப்பப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தமிழக அரசின் அவசர சட்டம் அமலாக்க முகவரான மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.
இது மத்திய உள்துறை அமைச்சகத்தால் சட்டம், சுற்றுச்சுழல், கலாச்சாரம் ஆகிய அமைச்சகங்களுக்கு நேற்று அனுப்பப்பட்டது. இதற்காகவே, காத்திருந்த அதன் மத்திய அமைச்சர்கள் அதில் தம் கருத்துக்களை சில மணி நேரங்களில் பதிவு செய்து மாலையே அனுப்பி விட்டனர்.
இதற்கு இறுதி வடிவம் கொடுத்த மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகத்தின் அவசர சட்ட முன்வடிவை உடனடியாக குடியரசு தலைவருக்கு அனுப்பியது.
இதில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, அவசரசட்ட முன்வடிவு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பத் தேவையில்லை எனவும், அதன் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகமே அனுப்பலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
இதனால், இன்று (சனிக்கிழமை) காலை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கால் இறுதி செய்யப்பட்ட முன்வடிவு சென்னை தலைமை செயலகத்திற்கு நேரடியாக அனுப்பப்பட்டு விட்டது.
இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கையில், "சில விஷயங்களை குடியரசு தலைவரின் சார்பில் எங்கள் அமைச்சகமே ஒப்புதல் அளிக்கலாம் என உள்ளது.
இதை குடியரசு தலைவருக்கு அந்த சட்டமுன்வடிவை அனுப்பிய பின் சில அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.
எனவே, இதை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் இன்று நேரடியாக தமிழக அரசிற்கு அனுப்பி விட்டோம். உதாரணமாக, எங்களைப் போன்ற ஐஏஎஸ் அதிகாரிகளின் பணி அமர்வு குடியரசு தலைவரால் அமர்த்தப்படுகிறோம்.
இதற்காக, அவர் சார்பில் எங்கள் அமைச்சகம் தான் கையெழுத்து இட்டு உத்தரவு அனுப்புகிறது. அதுபோலத்தான் இந்த விஷயத்தையும் கருத வேண்டும்" எனக் கூறினர்.
சட்ட திருத்தம்
தமிழக அரசால் உயற்றப்படும் அவசர சட்டங்கள், பொதுப்பட்டியலில் இடம் பெற்றவை மற்றும் இடம்பெறாதவை என இருவகைகள் கொண்டவை. இதில் ஜல்லிக்கட்டு மீதான சட்டம் பொதுப் பட்டியல் எண்-3 ல் இடம் பெற்றுள்ளது.
எனவே, இதை மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பின் தற்போது இயற்றப் படுகிறது. அப்பட்டியலில் 17 ஆவது இடத்தில் உள்ள ‘மிருகவதை அவசர சட்டம் 1960-ல் திருத்தம் செய்து இந்த அவசரசட்டம் இயற்றப் படுகிறது.
இதன்படி, ஜல்லிக்கட்டு என்பது மிருகவதையில் வராது என்றாகி விடும். இதுவும் தமிழகத்தில் மட்டுமே அமலாகும்.
நாளை ஜல்லிக்கட்டு
சென்னை வரும் அவசர சட்டத்தின் முன்வடிவு, தலைமை செயலக அதிகாரிகளால் ஆளுநர் வித்யாசாகர் ராவிற்கு அனுப்பப்படும். அவர் அதை சரிபார்த்த பின் கையெப்பம் இட்டு அவசர சட்டத்தை இன்று மாலையே இயற்றுவார் என எதிர்பார்க்க ப்படுகிறது.
இதை அடுத்து தமிழகத்தில் ஜல்லிகட்டு நாளை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் அதிகமாக தெரிகின்றன.