தமிழகத்தில் ஜல்லி கட்டை தடை செய்தது போல் கர்நாடகாவில் கம்பலா என்ற எருமை மாட்டு போட்டியையும் தடை செய்து ள்ளார்கள்.
இதற்கு பீட்டா தான் காரணம் என்று கூறப் பட்டாலும் மாநில உரிமைகள் மறுப்பு, தனி அடையா ளங்கள் சிதைப்பு போன்ற வற்றில் கவனமாக இருக்கும் மத்திய அரசின் பங்கும் உள்ளது.
இதே போல் மராட்டிய மாநிலத்திலும் ரேக்ளா பந்தயங்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் ஹூப்ளியில் கம்பலா என்ற எருமை மாடுகளை சேற்றுக்குள் ஓட விடும் விழாவிற்கு அனுமதி கேட்டு கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.
அனுமதி கிடைக்கும் வரை இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே பிப்ரவரி மாதம் இது தொடர்பாக போராட்டம் நடத்தப்படும் என போராட்டம் நடத்துவதை வழக்கமாக கொண்ட வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.