நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் சுமார் 2,400 ஏ.டிஎம்.,மையங்களை நிறுவ ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
ரயில்வே துறை மூலம் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் வரை, நிதி திரட்ட ரயில்வே துறைக்கு மத்திய நிதி அமைச்சகம் இலக்கு நிர்ணயித் துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, ரயில் நிலையங்களில் உள்ள நடை மேடைகளில், ஏ.டி.எம்.,களை நிறுவ, வங்கிகளுக்கு இடமளிக்க முன்வந்துள்ளது.
மேலும், கூடுதலாக விளம்பரப் பலகைகளை வைக்கவும், எல்.இ.டி. திரை மூலம் விளம்பரங்கள் செய்ய வசதி செய்து தரவும் ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது.