விஜயகாந்த் கூடத்தில் நிருபர்கள் விரட்டியடிப்பு | Ayatippu Vijayakanth chased reporters in the hall !

0 minute read
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தேமுதிக கூட்டம் நடை பெற்றது. இதில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார்.


இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருகை தந்திருந்தார். அவரை சந்தித்து பேட்டி எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் டிவி மீடியா நிருபர்கள் கூட்டம் நடைபெற இருந்த திருமண மண்டபத்தை நோக்கி சென்றனர்.

ஆனால், அங்கு தேமுதிகவினர் பத்திரிகை மற்றும் டிவி நிருபர்களை மண்டபத்திற்குள் நுழைய விடாமல் விரட்டி அடித்தனர். இதனால் நிருபர்களுக்கும், தேமுதிகவி னருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

ஆனால் சிறிது நேரத்தில் நிருபர்களே அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:
Today | 1, April 2025
Privacy and cookie settings