தீவிரவாதிகளை விசாரிக்க ஏற்கனவே அமெரிக்காவில் அமுலில் இருந்த சித்ரவதை முறையை கொண்டு வர தீவிரமாக பரிசீலிக்கிறேன் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித் துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அல்கொய்தா இயக்கத்தினர் பென்டகன் ராணுவ தலைமையகம் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் மீதும் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர்.
இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலால் கடும் கோபமடைந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ.புஷ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்தார்.
அதில் ஒன்றுதான் மக்களால் நினைத்துக் கூட பார்க்கமுடியாத சித்ரவதை முறை ‘வாட்டர்போர்டிங்' Waterboarding
இந்த சித்ரவதை விசாரணைக்கு உட்படுவோர் தலை சாய்தளத்தில் கீழ்நோக்கி தொங்குமாறு வைக்கப்படும்.
பின்புறம் அசைய முடியாமல் கம்பியால் பிணைக்கப் பட்டிருக்கும். பின்னர் மூக்கில் மூச்சுவிட முடியாத அளவுக்கு தண்ணீரை ஊற்றுவார்கள்.
இதனால் தண்ணீரில் மூழ்கடிப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதனால், பல நேரங்களில் நுரையீரல் சேதம், மூளை பாதிப்பு போன்றவற்றுக்கு இந்த சித்ரவதை வழிவகுக்கும்.
மூச்சு விடுவதற்காக அந்த மனிதன் போராடும் போது, உள்ளிட்ட உடல் காயங்கள் ஏற்படும். பல நேரங்களில், உயிர் இழப்புகளும் ஏற்பட்டன.
இதற்கு உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்படாத ஒரு நபருக்கு மரண தண்டனை வழங்குவதை போல இந்த நடைமுறை இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பராக் ஒபாமா, ‘வாட்டர்போர்டிங்' சித்ரவதை முறைக்கு தடை விதித்தார். இதனால் அவப்பெயரிலிருந்து அமெரிக்கா தப்பியது.
இந்நிலையில், தற்போது அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அந்த சித்ரவதை முறை அறிமுகப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.
2015ல் இந்த மாதிரியான விசாரணை முறைக்கு எதிராக செனட்டில் சட்டம் இயற்றப்பட்ட சூழ்நிலையில் கூட டொனால்ட் ட்ரம்ப் தனது கருத்தில் உறுதியாக உள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் கூறுகையில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.
எனவே நானும் ‘வாட்டர்போர்டிங்' சித்ரவதை முறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து தீவிரமாக பரிசீலித்துக்கொண்டிருக்கிறேன். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை.
அப்பாவி மக்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையை துண்டித்து படுகொலை செய்கிறார்கள். அதை வீடியோவில் பதிவு செய்து வெளியி டுகிறார்கள்.
ஆனால் அதற்கு பதிலடியாக எதையும் செய்வதற்கு அமெரிக்காவை சர்வதேசம் அனுமதிப்ப தில்லை. நாம் தீவிரவாதிகளை எதிர்க்க அவர்களுக்கு சம அளவுக்காவது செயல்பட வேண்டும்.
நாம் சட்டப்படி என்ன செய்ய முடியுமோ, அதையாவது செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சித்ரவதை பலன் அளிக்கும் என்றுதான் நான் நிச்சயமாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.