சென்னை மெரீனாவில் தொடர்ந்து வரும் ஜல்லிக்கட்டுப் பேராட்டத்தை அமைதியாக களைந்து செல்லுமாறு போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
மாநில அரசின் சட்ட வரைவையும் அவர் வாசித்து காண்பித்தார். அதன் பின் அவர்களை களைந்து செல்லுமாறு கேட்டார். ஆனால் அவர்கள் கால அவகாசம் கேட்டனர்.
கால அவகாசம் தர மறுத்த போலீசார் கொஞ்சம் கொஞ்சமாக போராட்ட இளைஞர்களை குண்டு கட்டாக வெளியேற்ற ஆரம்பித்தனர்.
பின்னர் தேசிய கீதத்தை பாட ஆரம்பித்தனர் அதனையும் பொருட்படுத்தாமல் போலீசார் அவர்களை அகற்றினர்.