தமிழகத்தின் முன்னாள் கனவுக் கன்னி . பாலிவுட் சூப்பர்ஸ்டாரினி ஸ்ரீதேவி பிறந்த ஊர், சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி கிராமம்.
ஐந்து வயதில் அம்மா அப்பாவோடு சென்னை வந்தவர் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களுடன் ஜோடியானார்.
அதன் பின் பாலிவுட் சென்று சூப்பர்ஸ்டார் ஆனார். போனிகபூரை திருமணம் செய்து செட்டில் ஆனவர் மீண்டும் திரையுலகில் பிரவேசம் செய்தார்.
தமிழில் விஜய் நடித்த புலி படத்தில் நடித்தார். இவர் பீட்டா அமைப்பில் உறுப்பினராக இருந்தார். மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மிருகவதை போராட்டங்களில் கலந்து கொள்வார்.
இப்போது தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு பிரச்னை கொழுந்து விட்டு எரிகிறது. மாணவர்கள், மாணவிகள் களம் இறங்கி போராடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஒரு யுகப்புரட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் தனது பிளாக்கில் கருத்துக் கூறிய ஸ்ரீதேவி, நான் தமிழச்சி ரத்தம். என் மண் தமிழ் நாடு. நான் சிவகாசிக்காரி.
எனது மண்ணின் பாரம்பரியத்தை குழி தோண்டிப் புதைக்கும். பீட்டா எனக்கு தேவையில்லை என்று கூறி இருக்கிறார். சபாஷ். நம்ப கோடம்பாக்க நடிகர்கள், நடிகைகள் யாரும் இன்னும் பீட்டாவில் இருந்து வெளிவரவில்லை.