வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கிடையே மோதல் நிலை உருவாகியுள்ளது.
இரு நாடுகளும் எல்லையில் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.
தென் கொரியாவின் இராணுவத் தளங்கள் மீது வடகொரியா ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டதையடுத்து இரு நாடுகளுக்கு மிடையில் பதற்றநிலை தோன்றியுள்ளது.
வடகொரியா மேற்கொண்ட ஆட்டிலறி குண்டு தாக்குதலுக்கு பதில் வழங்கும் விதமாக தாம் தாக்குதல் மேற்கொண்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
தென்கொரியாவின் மேற்குப் பகுதியில் உள்ள இராணுவத் தளங்கள் மீது வட கொரியா தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தென்கொரியா அவசர நிலையை பிரகடனப் படுத்துயுள்ளது. எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து
தென்கொரியாவின் மேற்கு எல்லைப்பகுதியில் வசிக்கக் கூடியவர்களை உடனடியாக வௌியேறுமாறு தென்கொரியா அரசாங்கம் எச்சரிக்ைக விடுத்துள்ளது.
வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கிடையே ஏற்கனவே பல ஆண்டுகளாக பகைமை நீடித்து வரும் நிலையில் இன்றைய தினம் இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.