டாக்ஸி... டாக்ஸி... சுவாரசிய வரலாறு !

இன்று மனிதனின் பயணத்தை சுகமாக்குவதிலும் எளிமையாக்குவதிலும் டாக்ஸிகளுக்கு பெரும்பங்கு உண்டு. டாக்ஸி தொடர்பான சுவையான தகவல்களின் தொகுப்பு வாசகர்களுக்காக....

20ம் நூற்றாண்டில்தான் இன்று நாம் பயன்படுத்தும் கார்கள் ‘டாக்ஸி’ என அழைக்கப்பட்டன.

டாக்ஸிகள் ஐரோப்பாவில் 19ம் நூற்றாண்டில் Taxe metre என அழைக்கப்பட்டன. பிரெஞ்சு வாசகங்களான இதில் Taxe என்றால் Tariff (கட்டணம்) எனப் பொருள். மீட்டர் என்றால் அதனை அளக்கும் கருவி எனப் பொருள்.

அமெரிக்க கார் விற்பனையாளர் ஜான்ஹெர்சிடம் ஒரு கட்டத்தில் நிறைய கார்கள் தங்க ஆரம்பித்தபோது அதனை வைத்து ‘Cab-Business’ துவங்க எண்ணினார்.

அப்போது இந்த வாடகைக் கார்களுக்கு ஒரு தனி வண்ணம் தேவை என தீர்மானித்து, எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணமான மஞ்சள் நிறத்தை டாக்ஸிக்கு அடித்து அறிமுகப்படுத்தினார்.

மும்பையில் ஒரு காலத்தில் பிரிமியர் பத்மினி டாக்ஸிகள் மிகவும் பிரபலம். கறுப்பு, மஞ்சள் வண்ணங்கள் இணைந்த டாக்ஸிகள் 1911ம் ஆண்டு அறிமுகமானது.

இதனை காலி (Kaali) - பீலி (Peeli) என அழைப்பார்கள். இன்று மும்பையில் சுமார் 51,000 டாக்ஸிகள் ஓடுகின்றன.

2007ல், 25 வருடங்களை கடந்த பழைய டாக்ஸிகளை, சாலைகளில் விலக்கி, புது டாக்ஸிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசு அறிவித்தபோது பிரிமியர் ஆட்டோமொபைல்தான் அதிகம் பாதிக்கப்பட்டது. 

ஒரு கட்டத்தில் அதன் பத்மினி மாடல் 63,000 வண்டிகள் மும்பை வீதிகளில் ஓடிக் கொண்டிருந்தன. இவற்றிற்கு மாற்றாக மாருதி, ஹூண்டாய், டாடா நிறுவன கார்கள் டாக்சிகளாக அறிமுகமாயின.

பெரிய குடும்பங்கள் பயணிக்க ஏதுவாய் அம்பாசிடர் கார்கள் பயன்பட்டன. இன்று அம்பாசிடர் கார் தயாரிப்பதே நின்றுவிட்டதால் அதன் நடமாட்டமும் பெரிய அளவில் குறைந்து விட்டது.

இன்று பல டாக்ஸி சர்வீஸ்கள் மக்களிடம் பிரபலம். உபேர், ஓலா, மெரு, ஈசி கேப்ஸ், டாக்ஸி ஃபார் ஷ்யூர், ஃபாஸ்ட் டிராக், என்.டி.எல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. சான்பிரான்சிஸ்கோவைச் சார்ந்த உபேர் கேப்ஸ் நிறுவனத்தின் ஒரு கார் டிரைவர், 

டெல்லியில் தனது காரில் பயணித்த ஒரு பெண்ணை காரில் கற்பழித்ததாக கூறி கைது செய்யப்பட்டார். இதனால் அந்த ‘உபேர்’ டாக்ஸி சேவைக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு டாக்ஸி டிரைவர் 19 பேரை காரில் ஏற்றிச் சென்றதாக வழக்கு பதியப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி அதனை நம்பவில்லை. அதே சமயம் டாக்ஸி டிரைவர், 

தான் தன்னுடைய டாக்ஸியில் 19 பேரை ஏற்றியது உண்மை எனக்கூறி, அவர்களை எப்படி ஏற்றினேன் என்பதையும் நிரூபித்துக் காட்டினார். ஆனால் நீதிபதி அவருக்கு தண்டனை வழங்கவில்லை. மாறாக ‘வித்தியாசமான கண்டுபிடிப்பாளர்’ எனக் கூறி அவரை விடுவித்துவிட்டார்.

லண்டனில் பாரி பக்சா என்ற டாக்ஸி டிரைவர், ஒரு பயணியை ஏற்றிக்கொண்டு பயணித்தபோது அவருக்கு அதிர்ச்சி. 34 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது மகன்தான், அந்தப் பயணி என அறிந்து கொண்டார்

.ெஹர்பர்ட் ஷார்ட்டி ஜோன்ஸ் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹுஸ்டனைச் சேர்ந்தவர். இவர் தொடர்ந்து ஒரே டாக்ஸியில் 30 லட்சம் மைல்கள் பயணம் செய்துள்ளார். 1,50,000 பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளார்.

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் சின்டி காப் இவர், 1975ம் ஆண்டு, டாக்ஸியில் பயணிக்கும்போது, பிறந்தார். அடுத்து அவர் வளர்ந்து, திருமணமான பிறகு இவருக்கு ஒரு மகன் பிறந்தான்; அந்த பிரசவம் ஆனதும் டாக்ஸியில்தான். 

இங்கிலாந்தில் டாக்ஸி ஓட்டும் டிரைவர்களுக்கு மற்ற சராசரி மனிதர்களைவிட கூடுதல் அறிவு உள்ளதாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கூறியுள்ளனர். மலேசியாவில் பல டாக்ஸிகளில், ‘No Kissing’ என்ற வாசகத்தைக் காணலாம்.

1976ல் ராபர்ட் டி நீரோ நடித்து, ‘Taxi Driver’ என ஒரு படம் வெளிவந்து அமர்க்களமாய் ஓடியது.

இதுவரை வெளியாகியுள்ள ஹாலிவுட் படங்களிலேயே சிறந்த ஆண்டி ஹீரோ படம் இதுதான் என உலக சினிமா ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர். 

ஹாலிவுட் நடிகர் டாம் ஹாக்ஸ், பிராட்லே தியேட்டரில், ‘Luck Guy’ என்ற நாடகத்தில் ேதான்றினார். அதனைப் பார்க்க நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு டாக்ஸி டிரைவரை அழைத்திருந்தார்.

அமெரிக்காவில் வருடத்திற்கு 1000 டாக்ஸி டிரைவர்கள் கொல்லப்படுகின்றனர். மொய்னுதீன் ஷேக் என்ற மும்பை டாக்ஸி டிரைவர், தன்னுடைய 10 வயது பையனுடன் 4 வருடங்கள் டாக்ஸியிலேயே வாழ்ந்தார். 

ஏன் தெரியுமா? அவருக்கு பயங்கர பணக்கஷ்டம் ஏற்பட்டு வீட்டை விற்றார். மனைவி அவரைக் கைவிட்டுச் சென்றுவிட்டார். ஆக, அவரும் மகனும் வீடு பார்க்காமல் டாக்ஸியிலேயே வாழ்ந்தனர்.
Tags:
Privacy and cookie settings