பொதுவாக வயது அதிகரிக்கும் போது காணப்படும் நோய், இது எலும்பு புரை நோய் என்றும் கூறப்படுகிறது. இவ்வகை நோய் சார்ந்த பொது மக்கள் சந்தேகங்கள்
மற்றும் கேள்விகளுக்கு ராமகிருஷ்ணா மருத்துவமனை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் லியோ பெர்னால்டு பதிலளிக்கிறார்.
எலும்பு புரை நோய் என்பது என்ன? இதன் பாதிப்பு அனைவருக்கும் வருமா?
எலும்புகளில் போதிய பலம் இல்லை என்றால் நம்மால் அன்றாடம் செய்யப்படும் வேலைகளை கூட சரியாக செய்ய முடியாமல் போய் விடும். எலும்பு உருக்கி மற்றும் எலும்பு புரை நோய் என்பது எலும்பின் பலம் குறைவது தான்.
அதாவது எலும்பில் தாது அடர்த்தி குறைந்து அதன் பலத்தை குறைத்து விடும். இந்த பாதிப்பு அனைவருக்கும் வரும் என்று கூற முடியாது. ஆனால் இதில் ஆண்களை காட்டிலும் பெண்கள் விரைவாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நோய் வருவதற்கான பொதுவான காரணங்கள் என்ன?
பொதுவாக பிறப்பு முதல் 30 வயது வரை எலும்பின் தாது உற்பத்தியும், வளர்ச்சியும் அதிகமாக இருப்பதால் எலும்பு பலத்துடன் தான் இருக்கும்.
அதுவே 30 முதல் 40 வயது வரை தாது உற்பத்தி மற்றும் வளர்ச்சி ஒரே அளவில் இருக்கும். 45 வயதுக்கு மேல் தாது உற்பத்தி குறைந்து எலும்பின் பலம் குறையும்.
வயது, சர்க்கரை, தைராய்டு, உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன் என்று இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. காரணங்கள் குறிப்பிட்டு சொல்ல இயலாது. பரம்பரை காரணமாகவும் ஏற்படலாம்.
என் மகள் 12ம் வகுப்பு படிக்கிறாள், உடல் உருவத்திற்கு மேல் அதிக எடை இருக்கின்றது. தற்போது மூட்டு வலியால் மிகவும் பாதிக்கப் படுகின்றாள். இதற்கு எலும்பு புரை நோயாக இருக்குமோ?
இந்த வயதில் இது போன்ற பாதிப்பு அவளின் எதிர் காலத்தை பாதித்து விடுமா என்று பயமாக உள்ளது? பள்ளி பருவத்தில் எலும்பு புரை நோய் வருவதற்கு வாய்ப்பு என்பது இல்லை. இதற்காக பயப்பட தேவையில்லை.
உங்கள் மகள் உடல் பருமனாக இருப்பதால் அதிக எடை காரணமாக கால் வலி ஏற்படலாம் அதனை முட்டி வலி என்று நினைத்து இருப்பீர்கள். உடல் பருமன் குறைப்பதற்கு தேவையானவற்றை செய்யுங்கள்.
உடல் பருமன் என்பது பல நோய்களுக்கு அடித்தளமாக உள்ளது. வருமுன் காப்பதே நல்லது. மூட்டு வலி என்றால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து தெளிவுபெறுங்கள்.
எலும்பு உருக்கி நோயினால் எதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்?
எலும்பு அதன் பலத்தை இழக்கும் பொழுது அது எளிதாக முறிந்துவிடும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தடுக்கி மெதுவாக கீழே விழுந்தாலும் முதுகெலும்பு, இடுப்பு எலும்பு, மணிக்கட்டு உடைந்து விடும்.
உடைந்த எலும்புகள் மீண்டும் கூடுவதற்கு அதிக நாட்கள் தேவைப்படும். எலும்பு முறியும் அபாயம் இந்நோயில் அதிக அளவில் உள்ளது.
என் தாத்தா, தந்தை இருவருக்கும் எலும்பு உருக்கி நோய் இருந்தது. அடிக்கடி எலும்பு முறிவு ஏற்பட்டு மிகுந்த சிரமப்பட்டார்கள் தற்போது எனக்கு வயது 40 தாண்டி விட்டது.
நடக்கும் போதும், பேருந்துகளில் பயணம் செய்யும் போதும் ஒரு வித பயத்துடனே இருக்கின்றேன்? நான் என்ன செய்வது ?
நீங்கள் சொல்வது சரிதான். இதற்கு பயந்து பயனில்லை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ளுங்கள். டெக்ஸா ஸ்கேன் எடுத்து பார்ப்பதன் மூலம் எலும்பின் உறுதி தன்மை.
வயதிற்கு தக்க உறுதி உள்ளதா?
பாதிப்பு எந்த அளவில் உள்ளது என்று தெரிந்து விடும். அதன் பிறகு நீங்கள் தேவைப் பட்டால் கால்சியம், வைட்டமின் டி மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளலாம்.
நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகின்றேன். இங்கு அடிக்கடி முதியவர்கள் எலும்பு முறிவு பாதிப்பால் சிரமப்படு கின்றனர்.
சரியான கேள்வி, பெரும்பாலும் முதியவர்களின் எலும்புகளில் பலம் இருக்காது. சிறிய அடி பட்டாலும் எலும்புகள் அதிகமாக பாதிக்கப்படும்.
முதியவர்கள் இருக்கும் இல்லம் மட்டும் அல்ல வீடுகளிலும் அவர்களுக்கு தகுந்த படி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
முதியவர்கள் இருக்கும் இல்லம் மட்டும் அல்ல வீடுகளிலும் அவர்களுக்கு தகுந்த படி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
கழிவறைகள் அவர்களுக்கு தகுந்த வாறும், மாடி படிகளில் கைப்பிடிகள், அவர்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்களில் கைப்பிடி அமைக்க வேண்டும், கழிவறை களில் அதிகம் வலுக்காத டைல்ஸ் பயன்படுத்த வேண்டும்,
இரவு நேரங்களில் விளக்குகளை போடுவதற்கு அவர்களுக்கு எளிதான இடத்தில் வைக்கலாம். அதே போன்று தேவையற்ற பொருட்களை அவர்கள் செல்லும் வழிதடத்தில் இருந்து அகற்றி விடலாம்.