ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் அறவழியில் நடந்து வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் இன்று காலை மோடியை சந்தித்தார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் எதுவும் செய்ய முடியாது என மோடி கைவிரித்து விட்டார்.
இது போராட்டக் காரர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது. ஆனாலும் இதுவரை மாணவர்கள் அறவழியில்தான் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அறவழியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களிடையே குழப்பத்தை விளைவிக்க பா.ஜ முயற்சி செய்து வருவதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது.
இதற்காக ஏபிவிபி அமைப்பை சேர்ந்த வெளிமாநில மாணவர்களை இறக்க முயற்சி செய்து வருகிறது.
அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தி பிரச்னை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.