ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ஜல்லிக்கட்டு தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும் தமிழக அரசின் கருத்தை கேட்க வேண்டும்.
தமிழக அரசின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என வலியுறுத்தப் பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனால், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப் பட்டது. ஆனால், ஜல்லிக்கட்டு தொடர்பாக நிரந்தர சட்டம் வரும் வரை ஜல்லிக்கட்டு நடை பெறாது என போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இதனால், ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.