ஜெயலலிதா இருந்த போது சசிகலா சகோதரர் திவாகரன் உள்ளிட்ட வர்களை விலக்கி வைத்திருந்ததால், அவரை நெருங்கவே அதிமுகவினர் நடுங்கி வந்தனர்.
இந்நிலையில் புத்தாண்டு அன்று மன்னார்குடியில் உள்ள அவரது வீட்டில் பெரிய பந்தல் போடப்பட்டு சேர்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்ததாம்.
அன்று திவாகரன் வீட்டிற்கு வந்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் அவருக்கு சால்வை போர்த்தினாராம். திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்ட அதிகாரிகள் பலர் அங்கு வந்திருந் தார்களாம்.
அமைச்சர்கள் துரைகண்ணு, ஓ.எஸ்.மணியன், காமராஜ் ஆகியோர் ஒருபடி மேலே போய் திவாரகன் காலில் விழுந் தார்களாம். முன்னாள் எம்.எல்.ஏ பூம்புகார் விஜயபாலன் மட்டும் காலில் விழ வில்லையாம்.
அப்போது குடும்பத்தினரிடம் சிரித்த முகத்துடன் திவாகரன் சொன்னாராம், நான் சொல்லவில்லை, இனி எல்லோரும் நம்மை தேடி வருவார்கள் என்று இப்படி அவர் பேசியதாக நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது.
சைரன் வச்ச கார்களால் மன்னார்குடி குட்டி தலைநகராக மாறி விட்டதாகவும் அந்த ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.