சென்னையை அடுத்த பட்டாபிராம் பகுதியில் காதலியை சந்திப்பதற்காக, அவரது வீட்டின் சுற்றுச்சுவர் ஏறி குதித்த காதலன் கடுமையாகத் தாக்கப் பட்டிருக்கிறார்.
பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் சுவேதா (பெயர் மாற்றப் பட்டுள்ளது).
இவரும் அதே கல்லூரியில் படித்து வருவதாக தெரிகிறது. சரவணனும், சுவேதாவும் நண்பர்களாக பழகியிருக் கிறார்கள்.
இதனால் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. அடிக்கடி தனிமையில் சந்தித்து, காதலை வளர்த்து வந்திருக் கிறார்கள்.
இவர்களது காதல் விவகாரம் சுவேதாவின் வீட்டிற்கு தெரிய வந்திரு க்கிறது. சுவேதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தி ருக்கின்றனர். அதுமட்டு மில்லாமல் சுவேதாவை வீட்டில் சிறை வைத்தனர்.
சுவேதாவிற்கு உடனடியாக வேறு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் செய்து வைக்கவும் திட்ட மிட்டு இருக்கிறார்கள்.
பெற்றோரின் முடிவை தெரிந்து கொண்ட சுவேதா செல்போன் மூலம் தனது காதலன் சரவணனிடம் சொல்லி கதறி அழுதி ருக்கிறார். இதனால் காதலியை மீட்க வேண்டும் என்று சரவணன் திட்டம் தீட்டியிருக்கிறார்.
தனது காதலியை நேரில் சந்தித்து, மீட்டுச் செல்ல திட்ட மிட்ட சரவணன், யாருக்கும் தெரியாமல் நள்ளிரவு சுவேதா வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்தி ருக்கிறார்.
சத்தம் கேட்டு முழித்த சுவேதாவின் தந்தை உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் அனைவரும் சரவணனை பார்த்து, ஆத்திரம் அடைந்துள்ளனர்.
மகளை தேடி வீட்டிற்கு நள்ளிரவில் திருடன் போல் சுவர் ஏறி குதித்த சரவணனை சூழ்ந்து கொண்டு, தாறு மாறாக அடித்து உதைத்திருக் கிறார்கள்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சரவணனை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருக் கிறார்கள். இது பற்றி பட்டாபிராம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகி ன்றனர்.
நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது.