வழக்கமாக கம்ப்யூட்டர் பயனர்கள் சொல்லும் புலம்பல் தான் இது.. "என்னுடைய கம்பயூட்டர் ரொம்ப ஸ்லோவா இருக்கு.. என்ன செய்றதுன்னே தெரியல.. "
நீங்களும் இது போல புலம்பி யிருக்கீங்களா? தொடர்ந்து படித்துப் பாருங்க.. உங்களுக்கு கண்டிப்பா ஒரு தீர்வு கிடைக்கும்.
கம்ப்யூட்டர் ஸ்லோ ஆவதற்கு என்ன காரணம்?
நிறைய குப்பையான பைல்கள் கம்ப்யூட்டரில் தேங்கி இருப்பது. தேவையற்ற புரோகிராம்கள் கம்பஃயூட்டரில் போட்டு அடைத்து நெருக்கிக் கொண்டிருப்பது.
இணையம் பயன்படுத்துபவர் என்றால் வைரஸ், மால்வேர் புரோகிராம்கள் போன்றவை.
என்ன செய்யலாம்? என்ன செய்தால் கம்ப்யூட்டர் பழையபடியே ஸ்பீட் ஆகும்?
கம்ப்யூட்டர் வேகமாக வொர்க் ஆக வேண்டுமென்றால் முதலில் உங்களுக்குத் தெரிந்த தேவையில்லை கோப்புகளை நீக்குங்கள்.
ஒன்றுக்கும் மேற்பட்ட டூப்ளிகேட் வேண்டாவே வேண்டாம்.
மிக்க முக்கியமான கோப்புகள் என்றால் அதற்கென்று ஒரு தனி ஹார்ட் டிஸ்க் வைத்து பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
கம்ப்யூட்டரில் டெம்பர்ரி பைல்கள் இருக்கும். இது தேவையில்லா பைல்கள். கம்பஃயூட்டரில் Run விண்டோவில் %temp% என அடித்தால்
கிடைக்கும் போல்டரைத் திறந்து அதிலுள்ள டெம்பர்ரி கோப்புளை அனைத்தையும் டெலீட் செய்யலாம்.
இதற்கும் ஒரு சாப்ட்வேர் உண்டு. C cleaner என்ற சாப்டவேர் கம்ப்யூட்டரில் உள்ள டெம்ப் பைல்களை மட்டுமல்ல...
பிரவுசர் குக்கீஸ், ஹிஸ்ட்ரி போன்ற தேவையில்லாத பைல்களையும் அழித்துக்கொடுக்கிறது.
எப்போதோ எதற்காகவோ பயன்படுத்திய சின்ன சின்ன சாப்வேர்கள் எல்லாம் கம்ப்யூட்டரில் இருக்கும். அதையெல்லாம் தேடிப்பிடித்து அன் இன்ஸ்டால் செய்துவிடுங்கள்.
டெஸ்க்டாபில் உள்ள தேவையில்லா மென்பொருள்களின் Shortcut ஐகான்கள் இருக்கும். அதையும் டெலீட் செய்து விடுங்கள்.
ஹார்ட் டிரைவை Defrag செய்து விடுங்கள். விண்டோஸே அதற்கான வசதிகளைக் கொடுக்கிறது.
பூட் பிராசஸ் வேகத்தைக் கூட்டுங்கள்... பூட்டிங்கின் போது தேவையற்ற புரோகிராம்கள் துவங்குவதை குறைத்து விடுங்கள்.
ஸ்டார்ட் அப் புரோகிராம்களை குறைப்பதற்கு சொல்யூட்டோ டூல் பயன்படும். கூகிள் "soluto tool" என தேடிப் பெறலாம். வேறு நிறுவன டூல்களும் உண்டு.
கம்ப்யூட்டர் ரெஜிஸ்ட்டரியில் பிரச்னை இருந்தாலும் கம்ப்யூட்டர் வேகம் குறையும். அதனால் ரெஜிஸ்ட்ரி பிரச்னையை சரிசெய்யுங்கள். பிரச்னையை கண்டுபிடிக்கவும்,
சரிசெய்யவும் உங்களுக்கு "Registry Repair tool" பயன்படும். இந்த டூலை கூகிளில் தேடி பெறமுடியும். கிளாரி சாப்ட் (Glarysoft) என்ற தளத்தில் கிடைக்கும் ரெஜிஸ்ட்ரி ரிப்பேர் டூல் நன்றாக இயங்குகிறது.
ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு டூலைப் பயன்படுத்த வேண்டுமா? அனைத்து பிரச்னைகளையும் ஒரே மென்பொருள் மூலம் தீர்க்க முடியாதா என்றபவர்களுக்கும் விடை உண்டு.
ட்யூன்அப் என்ற மென்பொருளைப் பயன்படுத்தி மேற்கண்ட அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்க முடியும். ட்யூனப் தளம் செல்ல கூகிள் சர்ச்சில "TuneUP" எனக்கொடுத்து தேடுங்கள்.
கிடைக்கும் தேடல்முடிவிலிருந்து உங்களுக்கு வேண்டிய டூலைப் பெற இணைப்பு கிடைக்கும்.
அதிலிருந்து வேண்டிய டூலை டவுன்லோட் செய்து கம்ப்யூட்டரில் உள்ள பிரச்னைகளை சரிசெய்யுங்கள். இறுதியில் முன்பைவிட உங்கள் கம்ப்யூட்டர் "ஸ்பீடாக" இருக்கும். அதில் சந்தேகமில்லை.