சைக்கிள் வாடகைக்கு கிடைக்கும்.. சென்னை மெட்ரோ !

வாகன நெரிசலைக் குறைக்கவும், பசுமைக்கு மாறும் வகையிலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சைக்கிள் களை வாடகைக்கு அளிக்கத் தொடங்கி யுள்ளது.
சைக்கிள் வாடகைக்கு கிடைக்கும்.. சென்னை மெட்ரோ !
முதலில் சிறிய முயற்சியாக சென்னை மெட்ரோ ஈக்காட்டுத் தங்கல் ரயில் நிலையத்தில் 10 சைக்கிள் களோடு இந்தத் திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

இதில் பயணிகள் 3000 ரூபாயைத் திரும்பப் பெறக் கூடிய பணமாகச் செலுத்த வேண்டும். அதே நேரம் அவர்கள் தினசரிக் கட்டணம் எதையும் செலுத்தத் தேவையில்லை.

பயணிகள் இறங்கிய இடத்தில் இருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கும், அங்கிருந்து திரும்பவும் வரும் வகையில் இத்திட்டம் அமைக்கப் பட்டுள்ளது. இவ்வசதி தினசரி பயணிக்கும் பயணிகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

இந்த முயற்சி வெற்றி யடையும் பட்சத்தில், மற்ற ரயில் நிலையங் களிலும் சைக்கிள் களை வாடகைக்கு விட சென்னை மெட்ரோ முடிவு செய்துள்ளது. அடுத்த 10 சைக்கிள் களுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

அதே வேளையில் ரூ.3000 டெபாசிட் தொகை பொதுப் போக்கு வரத்தைத் தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு அதிகமாக இருக்கும்.

இதற்குப் பதிலாக முந்தைய காலத்தில் இருந்தது போல, மணிக்கு இத்தனை ரூபாய் வாடகை என்று வசூலிக் கலாம் என்று சிலர் தெரிவிக் கின்றனர்.
இது குறித்து நாராயணன் என்னும் பயணி பேசும் போது, எத்தனை பேரால் இவ்வளவு பெரிய தொகையை அளிக்க முடியும் என்று தெரிய வில்லை.

சைக்கிள்கள் மணி நேரம் அடிப்படையில் வாடகைக்கு விடப்பட வேண்டும். அதே போல இந்த முறையை அனைத்து ரயில் நிலையங் களிலும் அமல்படுத்த வேண்டும் என்றார்.

பெங்களூரு, டெல்லி முன்மாதிரிகள்

முன்னதாக வாடகை பைக்குகள் டெல்லி மற்றும் பெங்களூரு மெட்ரோ ரயில் நிலைய ங்களில் அறிமுகப் படுத்தப் பட்டன.

ஆனால் பெங்களூ ருவில் சில வாகனங்கள் களவு போனதால், தற்போது மணி நேரத்துக்கு வாடகைக்கு அளிக்கும் முறை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.

சென்னையில், மெட்ரோ ரயில் வேலை முழுமை பெற்ற பின்னர் எல்லா ரயில் நிலையங் களிலும் வாடகை சைக்கிள்கள் அறிமுகப் படுத்தப் படுலாம் என்று திட்ட மிட்டுள்ள தாகக் கூறப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings