ஸ்டாலின் எதிர்த்து போராட போவது தீபாவை | Deepa Stalin to go to fight !

ஸ்டாலின் மிக மிக பக்குவமான அரசியல்வாதியாகி விட்டார். கடந்த காலங்களில் திமுக செய்த தவறுகள் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் இருந்தபோது எம்.ஜி.ஆர் இறந்து விட்டார். அவரது புகைப்படங்களை காட்டுங்கள்.

என்பது மாதிரியான நிறைய வசைபாடி மக்களின் வெறுப்பிற்கு ஆளானார் கலைஞர் கருணாநிதி. தானும் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.

அதே போல ஜெ., மருத்துவமனையில் இருந்த போதும் புகைப்படத்தை காட்டுங்கள் என்று கலைஞர் கேட்ட போது ஜெ., மீது பாசம் கொண்ட மக்கள் கடுப்பானார்கள்.

அதன்பின் பேசும் சக்தி இழந்து ஞாபகத்திறன் குறைந்து அமைதியாகி விட்டார் கலைஞர். ஸ்டாலின் செயல்தலைவர் ஆனார். சசிகலா பற்றியும், அதிமுக பற்றியும் யாரும் வாய் திறக்க கூடாது என்று கூறிவிட்டார்.

கட்சியினர் ஸ்டாலின் சொற்பேச்சு கேட்டனர். அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகளை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார். ஸ்டாலின் ஒரு விஷயத்தில் மிக தெளிவாகி விட்டார். தானும், தனது கட்சியும் எதிர்கொள்ள வேண்டியது சசிகலாவையோ, பன்னீரையோ அல்ல!

காரணம், மாணவர்கள் போராட்டத்திற்குப் பின் சசி, பன்னீர் பெயர் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிக அதிகமாகவே அடிப்பட்டுள்ளது. மக்கள் அதிக கொதிப்பில் இருக்கிறார்கள்.

டெல்லி தலைமை எதிர் பார்த்ததும் இதுவே தான். அது கச்சிதமாக நடந்து விட்டது. ஆமாம், திமுக இனி ஜெ.,தீபாவை தான் எதிர்கொள்ளப் போகிறது. எதிர் கொள்ள வேண்டும். அது காலத்தின் கட்டாயம். மக்கள் சொல்லப் போகும் தீர்ப்பும் அதுதான்.

மத்திய அரசும் தீபாவை சுற்றி நிகழ்வதை அலசி ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வந்து விட்டதாகவே தெரிகிறது. காரணம் நடக்கும் விஷயங்கள் அப்படி. பிப்ரவரி மாதம் முதல் அரசியல் அக்னி துவங்கி விடும். எதிர்பாருங்கள் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்?
Privacy and cookie settings