டிஜிட்டல் மாத்திரை... பிரிட்டிஷ் ஏர்வேஸ் !

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடல் நிலையை கண்காணிக்கும் பொருட்டு 'டிஜிட்டல் மாத்திரை' வழங்கும் முயற்சியை அறிமுகப் படுத்தப் படவுள்ளது.
டிஜிட்டல் மாத்திரை... பிரிட்டிஷ் ஏர்வேஸ் !
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்யக் கூடிய பயணிகளுக்கு இன்ஜெஸ்டிபுள் சென்சார் தொழில் நுட்பத்தின் மூலம் 

உருவாக்கப் பட்டுள்ள டிஜிட்டல் மாத்திரைகள் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித் துள்ளது.

இந்த மாத்திரை பயணிகளின் தூக்கம், உடலின் தட்ப வெப்பநிலை, இதயத் துடிப்பு, பசி, அசவுகரிய நிலை குறித்த அனைத்து தகவலையும் தெரிவிக்கும் என கூறப்பட்டுள்ளது.

பயணிகளின் வயிற்றில் உள்ள அமிலத்தன் மையைக் கண்காணிக்கவும் உதவும் இந்த டிஜிட்டல் மாத்திரையை வேரபிள் பேட்ச் அல்லது ஸ்மார்ட்போன் ஆப் மூலம் இயக்கலாம்.
இந்த ஸ்மார்ட் மாத்திரைகளை ‘ப்ரோடஸ் டிஜிட்டல் ஹெல்த்’ எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிறுவனம் ஸ்மார்ட் மாத்திரைகளைப் போல உடலில் தோலுக்கடியில் பொருத்தும் நானோ சென்சார்களையும் உருவாக்கி யுள்ளது. 

இவை மாரடைப்பு ஏற்படப் போவதை முன் கூட்டியே தெரிவிக்கும் திறனுடையது.
Tags:
Privacy and cookie settings