தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி கல்லூரி, பள்ளி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக மாணவிகளும் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் அன்புமணி ராமதாஸ் ஜல்லிக் கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக் கட்டை நடத்த வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்து பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.
அவருக்கு பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்க வில்லை. இதனை யடுத்து பிரதமர் வீடு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அங்கிருந்த போலீசார் அன்பு மணியை குண்டு கட்டாக கைது செய்து பேருந்தில் அழைத்து சென்றனர்.
அன்புமணி ராமதாசுடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தியும் போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப் பட்டார்.
அவரை எங்கு கொண்டு சென்றனர் என்ற விபரம் தெரிய வில்லை. சிறிது நேரத்தில் விடுதலை செய்து விடுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
வழக்கமாக டெல்லியில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப் பட்டவர்களை திகார் ஜெயிலில் அடைப்பது வழக்கம் என்பது குறிப்பிடத் தக்கது.