ராகுல் டிராவிட்டுக்கு பெங்களூரை சேர்ந்த பொறியியல் கல்லூரி ஒன்று டாக்டர் பட்டம் வழங்கி கவுரவவிக்க முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்.
இவர் இந்திய அணியின் சுவர் என்று அடைமொழி வைத்து அழைக்கப்படும் அளவிற்கு தடுத்தாடுவதில் மிகவும் கெட்டிக்காரர்.
இவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் கடந்த 2014ல் கர்நாடகாவின் குலர்கா பல்கலைக் கழகம் கெளரவ பட்டம் இவரை கவுரவித்து வழங்கியது.
இந்நிலையில் பெங்களூரில் உள்ள விஸ்வேஷ் வரய்யா பொறியியல் கல்லூரி டிராவிட்டுக்கு மற்றொரு கெளரவ பட்டம் வழங்க திட்டமிட்டுள்ளனர்.
வரும் 27ம் தேதி கல்லூரியின் பட்டமளிப்பு விழாவின் போது டிராவிட்டுக்கு பட்டம் அளிக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
பெங்களூருவின் விஸ்வேஷ் வரய்யா பொறியியல் கல்லூரியில் தான் டிராவிட்டின் தாய் புஸ்பா அந்த கல்லூரியில் தான்
பேராசிரியராக பணியாற்றி வருவதால் அவர் கையாலே டிராவிட் இந்த பட்டத்தை பெறலாம் என்று கருதப் படுகிறது.