ஜல்லிக்கட்டு தடைக்கு மத்திய அரசே காரணம் பீட்டா | Due to the federal government to ban jallikattu Beta !

தமிழக மாணவர் களின் கோரிக்கை களில் ஒன்று பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்பதும் தான். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவும் இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி யுள்ளார்.


இந்நிலையில் இதுகுறித்து பீட்டா அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. இதுபற்றிய செய்தி இந்து ஆங்கில நாளிதழ் இணைய தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.

அதில் பீட்டா இந்தியா அமைப்பின் சார்பில் நிர்வாகி ஒருவர் கூறியிருப் பதாவது, ” நாங்கள் சட்டத்தை உருவாக்க முடியாது. ஆனால் சட்டத்தை மதிக்கிறோம்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் தான், இத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு, காளைச் சண்டை, எருது ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளை தடை செய்துள்ளது. அந்த சட்டம் இவற்றை கொடூரமா னதாக பார்க்கிறது.

எங்களுக்கு எதிராக போராட்டத்தை திசை திருப்புவதும், நாங்கள் தான் இதற்கு காரணம் என்று கூறுவதும் சட்டத்தை பற்றி தெரியாதது தான்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு சட்டத்தை இயற்ற அதிகாரம் படைத்தது நாடாளுமன்றம் தான். அதனை பாதுகாப்பது தான் நீதிமன்றத்தின் வேலை.

ஒரு விசயத்தை தவறு என்று நாடாளு மன்றத்தில் சட்டம் இயற்றி சொல்லி விட்டால் அதனை நீதிமன்றம் நடை முறைப் படுத்த மட்டுமே பெரும்பாலும் அதிகாரம் உண்டு.

எனவே மத்திய அரசு நிறை வேற்றியுள்ள சட்டத்தைத் தான் உச்ச நீதிமன்றம் பின்பற்றுகிறது. அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள விசயங்களை வைத்துத் தான் பீட்டா போன்ற எந்த ஒரு அமைப்பும் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.

மத்திய அரசு ஜல்லிகட்டு நடத்த சட்டம் நிறைவேற்றி விட்டால் பீட்டாவோ வேறு எந்த அமைப்போ எப்படி அதற்கு தடை கோர முடியும் என சட்ட நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Tags:
Privacy and cookie settings