ஜல்லிக்கட்டு வெற்றிக்கு மனிதாபிமான உதவிகளும் காரணம் !

ஜல்லிக்கட்டு எந்த ஒரு தலைமையும் எந்த ஒரு பைனான்ஸ் பின்னணியும் இல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று 30 லட்சம் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு வெற்றிக்கு மனிதாபிமான உதவிகளும் காரணம் !
அவர்கள் போராட்டம் வெற்றி பெற இது போன்ற மனிதாபிமான செயல்தான் காரணம். கோவை வ.உ.சி., மைதானத்தில் ஆயிரக் கணக்காண மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் மைதானம் செல்ல இலவச ஆட்டோ என்று நோட்டீஸ் ஒட்டப்பட்ட பல ஆட்டோக்கள் இயங்கி வருகிறது.

இது போன்ற தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் லட்சகணக்காண மாணவர்களுக்கு தேவையான தண்ணீர், உணவு, இரவில் தூங்குவதற்கு வசதியாக போர்வை,

நிழலுக்காக தற்காலிக டெண்ட் போட்டு கொடுப்பது என பலரும் கேட்காமலே செய்து வருகின்றனர். இது போன்ற மனிதாபிமான உள்ளவர்களால் தான் இன்று மாணவர்கள் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது என்றே கூறலாம்.
Tags:
Privacy and cookie settings