ஜல்லிக்கட்டு போராட்டம் போதும்.. சிவசேனாதிபதி !

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஜல்லிக்கட்டு மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என மாணவர்கள் இளைஞர்கள் உட்பட அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டம் போதும்.. சிவசேனாதிபதி !

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் பிறபிக்கப்பட்டது. 70க்கும் மேற்பட்ட நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த முடியும் அதுவும் இந்த ஆண்டு மட்டுமே.


எனவே, எங்களுக்கு அவசர சட்டம் வேண்டாம். நிரந்தர சட்டம் தான் வேண்டும் என போராட்ட காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர்.

இந்நிலையில், ஜல்லிக் கட்டுக்காக போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் போராட்டத்தை முடிவுக்கு 

கொண்டு வர வேண்டும்' என காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி வேண்டுகோள் விடுத் துள்ளார்.

கார்த்திகேய சிவசேனாதிபதி தன் முகநூல் பக்கத்தில் வெளி யிட்டுள்ள அறிக்கை, “ஜல்லிக்கட்டு ஆர்வலர்களே, இறுதியாக மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் அரசால் ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இதை முதல் கட்ட நடவடிக்கை யாக எடுத்து கொண்டு, சட்ட ரீதியாகவும், பாராளுமன்றம் மூலமாகவும் நிரந்தர தீர்வுக்கான பணிகளை தொடங் குவோம்.


மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் தவே, மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் ஆகியோர் தேவையான நடவடிக்கை களை எடுப்பதாக உறுதி அளித் துள்ளனர்.

சுமூகமான தீர்வை ஏற்படுத்த நமது பிரதமர், முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர்களை நாம் நம்ப வேண்டும். நாளை, அலங்கா நல்லூரில் உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு நடக்கும் என நம்புவோம்.

தேவையான அனைத்து நடவடிக் கைகளும் எடுக்கப் பட்டுள்ளன என்பதை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தெரிவியுங்கள். புதிய பிரச்னைகள் எதுவும் வேண்டும்.

காளைகளை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். ஒரு பிரச்னை ஏற்பட்டால், விலங்குகள் நல அமைப்புகள் அதை நீதிமன்றத்துக்கு எடுத்த செல்ல தயாராக உள்ளனர்.

தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் பல உள்ளன. எனினும், இப்போது ஜல்லிக்கட்டு பிரச்னையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். 

நாம் அமைதியை கடைப்பிடித்து, ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு சட்ட ரீதியாக நிரந்தர தீர்வை ஏற்படுத்த முயற்சி செய்வோம். மாணவர்களும், மக்களும் போராடத்தில் களமிறங்கவில்லை என்றால் இந்த வெற்றி கிடைத்திருக்காது. 


இந்த சூழ்நிலையில் போராட்டம் முடிவுக்கு வர வேண்டும். பின்னர் சிறிது ஓய்வு எடுத்து கொண்டு, இது குறித்து சென்னை, மதுரை, கோவை, சேலம் மற்றும் நெல்லையில் ஆலோசனை நடத்துவோம்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு குழுவின், கல்லூரியின் பிற அமைப்புகளின் தலைவர்களை அடையாளம் காணுங்கள். நாம் அனைவரும் ஒன்று கூடுவோம். அர்த்தமுள்ள தீர்வுகளை, அரசியல் சட்டப்படி தான் ஏற்படுத்த வேண்டும்.

இதற்கான போராட்டங்களும் அந்த வகையில் தான் இருக்க வேண்டும். இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட காரணமாக இருந்த மாணவர்களை வணங்குகிறேன். 

இந்த போராட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இந்திய விலங்குகள் நல வாரிய தலைவர் கடந்த மாதம் மாற்றப்பட்டு விட்டார். 


விவசாய பிரதிநிதிகள் இடம் பெற்ற புதிய வாரியம் இன்னும் இரண்டு மாதங்களில் செயல்பட தொடங்கும். மேலும், பீட்டா அமைப்பின் நிதி மோசடி குறித்து விசாரிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சரிடம் கூறியுள்ளோம்.

முறையான புகார்கள் வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்உறுதி அளித்துள்ளார். விரைவில் அந்த புகார் மனு வெளியிடப்படும். 

அதை அனைத்து தரப்பினரும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகேய சிவசேனாதிபதி ஜல்லிக்கட்டு தடையால் இந்தியாவில் 13 காளை இனங்கள் அழியும் நிலையில் உள்ளன என தெரிவித்திருந்தார்.


மேலும், கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings