பாலிவுட் ஹீரோயின்கள் கலாச்சாரமே வேற. அவர்களுக்கு லவ், டேட்டிங், சேர்ந்து வாழுதல் போன்றவை சகஜம்.
விவாகரத்து ஆன பிறகு கூட, முதல் மனைவி, இரண்டாம் மனைவி, பிள்ளைகளுடன் பார்ட்டி கொண்டாடும் கலாசாரம் கொண்டவர்கள் பாலிவுட் ஹீரோக்கள்.
அப்படி இருக்கும் போது, சேர்ந்து வருவதில் பிரச்சனை என்ன இருக்கப் போகிறது? என்ற நிலையில் தான் ஒரு செய்தி. ஃபரான் அக்தரும், நடிகை ஸ்ரத்தா கபூரும் சேர்ந்து வாழுகிறார்கள்.
ஸ்ரதாவுக்காகத் தான் தன் மனைவியை அக்தர் விவாகரத்து செய்தார் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. பிரபல நடிகர் சக்தி கபூரின் மகள் தான் ஸ்ரத்தா.
இவர் அக்தருடன் சேர்ந்து வாழுவது பிடிக்காமல், ஸ்ரதாவை அவர் வீட்டிலிருந்து தரதர வென்று கையை பிடிச்சி இழுத்து, தன் வீட்டிற்கு கூட்டி வந்து விட்டார் என்று ஒரு பரபரப்பு செய்தி பரவி, பாலிவுட் பதறிப்போனது.
ஆனால், சக்தி கபூர், இப்போ தான் கோவாவில் இருந்து வீட்டுக்கு வருகிறேன். இந்த செய்தியை படிச்சி அதிர்ச்சி அடைந்து விட்டேன்.’ என்று விளக்கம் கொடுத்தார்.
ஸ்ரத்தா, எங்கப்பா வீட்டில இருக்கிற என்னை இப்படி எழுதறாங்களே? பிரைவசி எங்களுக்கு இல்லை? என்று அவர் திட்ட, ஒரே பரபரப்பு தான் போங்க ஜி!