அப்பா பெயரை காப்பாத்துங்க, ஸ்டாலினுக்கு ரஜினி வாழ்த்து !

தளபதி சகாப்தம் தமிழக அரசியலில் துவங்கி விட்டது. ஒரு புது வித அரசியல் நாகரீகத்தை தளபதி என்றோ துவங்கி விட்டார். 
அப்பா பெயரை காப்பாத்துங்க, ஸ்டாலினுக்கு ரஜினி வாழ்த்து !

கட்சி பேதங்கள் பார்க்காமல் அரசியல் எதிரிகளைக் கூட, தேடி நலம் விசாரிக்கும் ஒரு நாகாரீகம் துவங்கி இருக்கிறது.


நேற்று தளபதி திமுகவின் தலமைப் பொறுப்பிற்கு வந்ததுமே தமிழக முதல்வர் பன்னீரைத் தேடிச் சென்று பார்த்தார்.பன்னீர் வாழ்த்துக் கூறினார்.

அதன் பின் மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினி, தளபதிக்கு வாழ்த்து மழை பொழிந்தார். 

அதில் அப்பாவின் பெயரைக் காப்பாற்றுங்கள், குடும்பக் கட்சி என்கிற பெயரை தூக்கி எறியுங்கள்.

உங்களுக்கு தமிழக அரசியலில் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று கூறினாராம். ஸ்டாலின், ரஜினியின் வாழ்த்தை ஏற்றுக் கொண்டு நன்றி கூறி மகிழ்ந்தி ருக்கிறார்.

Tags:
Privacy and cookie settings