தமிழகம் முழுவதும் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற அவசர சட்டம் நேற்று வெளியானது. ஆனால், ஜல்லிக் கட்டுக்கு நிரந்திர தீர்வு கிடைக்கும் வரை தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும் என்று மக்கள் அறிவித்தனர்.
இதனை யடுத்து காலை 10 மணியளவில் அலங்கா நல்லூரில் நடைபெற் இருந்த ஜல்லிக்கட்டு போட்டி முதலில் ரத்தானது.
இதனை தொடர்ந்து, கோவையில் நடைபெற்ற ரேக்ளா ரேஸ் போட்டி போராட்டக் காரர்களால் பாதியில் நிறுத்தப்பட்டது. இதேபோல, திண்டுக்கல் மாவட்டம் நத்தம்,
கோவில் பட்டியில் வாடிவாசல் முன்பு மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் இளைஞர்கள் மற்றும் போலீஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டது.
இதேபோல, தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஜல்லிக் கட்டுக்கு நிரந்தர தீர்வு கேட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.