விமானத்தை மடக்கிய தமிழச்சிகள்.. மதுரையில் !

0 minute read
தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து நாட்களாக ஜல்லிக் கட்டிற்காக மாணவர்கள் வரலாறு காணாத தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விமானத்தை மடக்கிய தமிழச்சிகள்.. மதுரையில் !
இந்நிலையில் மாணவர் களுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் உலக நாடுகளி லுள்ள அனைத்து தமிழர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று தமிழகம் அறிவிக்கப்படாத ஒரு பந்த்தை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் பஸ், ரயில் மறியலில் ஈடுபட்ட மதுரை தமிழர்கள் இன்று மதுரை விமான நிலையத்தை முற்றுகை யிட்டனர். பல ஆயிரம் பேர் திரண்டு வந்து, இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டு அனுமதிக் காவிட்டல் தமிழகத்தை தனியாக பிரித்து தருமாறு மத்திய அரசுக்கு பெண்கள் எச்சரிக்கை விடுத்தனர். 

இந்த முற்றுகை போராட்டத்தை யடுத்து, மதுரை விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யபட்டது.
Tags:
Privacy and cookie settings