கடந்த சில நாட்களாகவே ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் போராட்ட த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், என தமிழகம் முழுவதும் பலத்த ஆதரவு பெருகி வருகிறது.
போராட்ட த்தில் இறங்கிய இளைஞர் களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களை ஒருங்கிணைப் பதற்காக முதலில் குரல் கொடுத்தவர் நடிகர் சிம்பு.
அது மட்டுமில்லாமல் தனது வீட்டிலேயே அமைதியான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினார்.
சிம்புவின் அதிரடி இளைஞர்களுக்கு பெரும் ஊக்கத்தை கொடுத்தது என்றுகூட சொல்லலாம்.
வீதிகளில் இறங்கி போராடி வரும் இளைஞர்களுக்கு தனது ரசிகர்கள் மூலம் தண்ணீர் பாக்கெட்டுகள் வினியோகித்து தன்னால் முடிந்த அனைத்து செய்து வருகிறார்.
தனது வீட்டிற்கு முன்னர் நேற்று இரவிலிருந்து அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சிம்புவின் இந்த போராட்ட த்திற்கு ஆதரவு தெரிவித்து நூற்றுக் கணக்கான அவரது ரசிகர்கள், அவரது வீட்டு முன்னர் கூடியுள்ளனர்.
இந்நிலையில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய சிம்பு,”ஜல்லி கட்டு போராட்டத்தை ஒடுக்கு வதற்காக சென்னைக்கு மத்திர ராணுவம் வந்தி ருப்பதாக தகவல்கள் கூறப்ப டுகின்றன.
ராணுவம் வருவது குறித்தெல்லாம் நமக்கு பிரச்சனைகள் இல்லை. ஆனால் தமிழகம் முழுவதும் அத்தனை லட்சம் பேர் போராடி வருகிறார்கள். அவர்களை யாராவது தாக்கினால்,
தேசிய கொடியை உடல் மேல் போர்த்தி கொள்ளுங்கள். தேசிய கொடி மேலிருந்தால், யாரும் உங்களை தாக்க முடியாது.
தேசிய கொடி மேலே இருக்கும் போது, நீங்கள் அடித்துப் பாருங்கள் பார்க்கலாம்..!” என கொந்தளிப்பாக கூறினார்.
மேலும் ராணுவமோ, காவல்துறையோ உங்களை தாக்க வந்தால் எழுந்து நின்று தேசிய கீதம் பாடுங்கள். அறவழி போராட்டத்தில் வன்முறைக்கு இடமில்லை என்றும் ஆவேசமாக கூறியுள்ளார்.