டிரம்பை எதிர்க்க பிரான்ஸ் எடுத்த முடிவு !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அகதிகள் மற்றும் குடிபெயர்ந்தவர்கள் விடயத்தில் காட்டும் அதிரடியை பார்த்து கொண்டு இனி சும்மா இருக்க மாட்டோம் என பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோய்ஸ் ஹோலன்டே கூறியுள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதி லிருந்தே டொனால்டு டிரம்ப் உலக நாடுகளை மிரள வைக்கும் வண்ணம் பல அதிரடிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதிலும், முக்கியமாக குடியேறிகளுக்கு அமெரிக்காவில் இடம் இல்லை என்ற விடயத்தை டிரம்ப் ஜனாதிபதியான பின்னர் வலுவாக செய்து வருகிறார்.

மேலும், ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகும் Brexitஐ அவர் வரவேற்றும் உள்ளார்.

இதனிடையில் இந்த விடயங்கள் கூறித்து பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோய்ஸ் ஹோலன்டே தற்போது கருத்து கூறியுள்ளார்.

டொனால்டு டிரம்பின் பாதுகாப்புவாத கொள்கையால் ஐரோப்பியா மட்டுமல்லாமல் உலகின் முக்கிய நாடுகளின் பொருளாதாரங்கள் சீர்குலைய கூட வாய்ப்புள்ளது.
மேலும், வேறு நாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறுபவர்கள் மீது டிரம்ப் அரசு கடுமை காட்டுவதை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது. 

இனி தக்க பதிலளிப்போம் என பிரான்கோய்ஸ் ஹோலன்டே கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings